சபரிமலை : பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்கத் தடை

Plastic Shampoo Sachets & Kungumam Ban In Sabarimala Temple : சபரிமலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Kerala High Court Prohibits Sale Of Plastic Shampoo Sachets Chemical Kungumam In Sabarimala Ayyappa Temple
Kerala High Court Prohibits Sale Of Plastic Shampoo Sachets Chemical Kungumam In Sabarimala Ayyappa TempleKerala High Court
1 min read

சபரிமலை கோவில் :

Plastic Shampoo Sachets & Kungumam Ban In Sabarimala Temple : உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விழாக் காலங்களில் லட்சக் கணக்கான் இருமுடி கட்டி வந்து வழிபட்டு செல்கிறார்கள். மண்டல, மகரவிளக்கு சீசனில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சுவாமி தரிசனத்திற்கு 36 மணி நேரம் கூட பிடிக்கும்.

சபரிமலையில் மண்டல பூஜை

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா வரும் 17ம் தேதி தொடங்குகிறது. 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். இதற்காக 16ம் தேதி(Sabarimala Temple Opening Dates 2025 Tamil) கோவில் நடை திறக்கப்படுகிறது. தினந்தோறும் 90 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜை தொடங்குவதை ஒட்டி அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கான காப்பீடு வசதியும், கேரள மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமத்திற்கு தடை

இந்தநிலையில், சபரிமலை, பம்பா, எருமேலி பகுதிகளில் பாக்கெட் ஷாம்பு, ரசாயன குங்குமம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பிளாஸ்டிக் பைகள், செயற்கை குங்குமத்தால் நீர் மாசு அடைவதாக கேரள உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் 'எருமேலியில் உள்ள ஆற்று ஓடைகளின் குறுக்கே வலைகள் அமைக்கப்பட வேண்டும். வேதியியல் ரீதியாக தயாரிக்கப்படும் குங்குமம் பயன்பாட்டால் சூற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது' என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் அதிரடி, பக்தர்கள் வரவேற்பு

எனவே, சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பாக்கெட் ஷாம்பு, செயற்கை குங்குமம் அதாவது ரசாயனம் கலக்கப்பட்ட குங்குமம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை மற்றும் அதை சுற்றி அமைந்துள்ள வனப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தண்ணீர் மாசடைவதை தடுக்கும் பொருட்டு நீதிமன்றம் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு ஐயப்ப பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in