
Mahalaya Amavasya 2025 Tharpanam in Tamil : மாதம் தோறும் வரும் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தினாலும், மூன்று அமாவாசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். அவை ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை எனப்படும் புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகும். இந்த ஆண்டு மஹாளய அமாவாசை, வரும் 21ம் தேதி(Mahalaya Amavasya 2025 Date) வருகிறது.
சிறப்பு வாய்ந்த மஹாளய அமாவாசை :
சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால் மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் தர்ப்பணம்(Mahalaya Amavasya 2025 Tharpanam) கொடுப்பதே இதன் தனிப்பெரும் சிறப்பாக இருக்கிறது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம் :
மஹாளய அமாவாசை அன்று நீத்தார் கடன்களை நிறைவேற்றும் சிறப்பு வாய்ந்த புனித தலங்கள் உள்ளன. அவை என்ன என்பதை பார்ப்போம்(Pithru Tharpanam Temples in Tamilnadu).
1. ராமேஸ்வரத்தில் உள்ள 64 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்(Mahalaya Amavasya in Rameswaram) செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.
2, காசி அருகே விஷ்ணுகயா ஆலமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விஷ்ணு பாதத்தில் தர்ப்பணம் செய்தால் மகத்தான புண்ணியங்கள் திதி கொடுப்போருக்கு வந்து சேரும்.
3. கும்பகோணம் மகாமகக் குளக்கரையில்(Kumbakonam Mahamaham Kulam) தர்ப்பணம் செய்து கரையில், ஆலமரத்தடியில் தான தர்மங்கள் செய்தால் வாழ்க்கையில் நன்மைகள் பெருகும். .
4. கங்கை நதி பாய்ந்தோடும் காசியில், தர்ப்பணம் செய்து, வழிபாடு செய்வது சாலச் சிறந்தது என சாஸ்திரங்கள் சிறப்பிக்கின்றன.
5. சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் ஆலய நந்தவனத்தின் பின் பகுதியில் முன்னோர்களுக்கு கடன்களை செய்து பொதுமக்கள் புண்ணியம் தேடிக் கொள்கிறார்கள்.
6. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளக்கரையில் முன்னோர்களை வழிபட, அவர்கள் வம்சம் தழைக்கும்.
7. சென்னையை அடுத்த திருவள்ளூர் வைத்திய வீரராகவர் ஆலய திருக்குளத்தில் முன்னோர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தி வழிபாடு நடத்துவது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
8. கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டத்திற்கு அருகே உள்ள திலதைப்பதியில் தர்ப்பணம் செய்து வழிபட முன்னோர்களின் ஆசி கிட்டும். ராமபிரான் தன் தந்தை தசதரருக்கு தர்ப்பணம் செய்த தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது..
9. ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள குப்த கங்கையில் நீத்தார் கடனை நிறைவேற்றினால் பெரும் புண்ணியம் கிட்டும்.
10. பவானி சங்கமேஸ்வரர் ஆலயம், கூடுதுறையில், பக்தர்கள் முன்னோர்களுக்கு சிராத்தம் கொடுத்து புண்ணியங்களை பெறுகின்றனர்.
11. திருச்சி, பூவாளூர் திருமூலநாதர் ஆலயத்திற்கு அருகே ஓடும் பங்குனி ஆற்றின் கரையில் மஹாளயபட்ச தர்ப்பணம் செய்தால், இதற்கு முன்பு திதி கொடுக்கத் தவறிய தோஷங்கள் நீங்கி, முன்னோர்களின் ஆசி கிட்டும்.
12. திருவையாற்றுப் படித்துறையில் முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்தால் தீவினைகள் அகன்று நன்மை கிட்டும்.
13. திருப்பூவனம் பூவனநாதர் ஆலயத்தில் சூரியனால் உண்டாக்கப்பட்ட மணிகன்னிகை தீர்த்தக் கரையில் மஹாளயபட்ச தினத்தன்று தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கு, முன்னோர்களின் பரிபூரண ஆசி வந்து சேரும்
13. திருச்சி மாவட்டம் பூவாளூர் திருமூலநாதர் ஆலயத்திற்கு அருகே ஓடும் பங்குனி ஆற்றின் கரையில் மஹாளயபட்ச தர்ப்பணம் செய்தால் திதி கொடுக்கத் தவறிய தோஷங்கள் நீங்கி, முன்னோர்கள் ஆசி கிட்டும்.
14. காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில், ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடனை நிறைவேற்றினார். அங்கு, திதி கொடுத்தால், முன்னோர் ஆசி மட்டுமின்றி, திருமாலின் திருவருளும் கிட்டும்.
15. விருத்தாசலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகேயே ஓடும் மணிமுத்தாறு நதி தீரத்திலும் நீத்தார் கடனை நிறைவேற்றுவது சிறப்பானது.
16. வேதாரண்யத்தில் ஆதிசேது எனும் கோடியக்கரை தீர்த்தக்கரையில் புனித நீராடி, திதி கொடுத்தால் வாழ்வில் வளம் பெறலாம்.
மேலும் படிக்க : ஆடி அமாவாசை : புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
இவை மட்டுமின்றி கோவில்களில் உள்ள குளக்கரையில், நதிகள், நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு மஹாளய அமாவாசை 2025 அன்று திதி கொடுத்தால், நன்மைகள் வந்து சேரும்.
------------------------