Navaratri 2025: நவராத்திரி கொலு உலக உயிர்களை ஒன்று சேர்க்கும் விழா

Navaratri Golu Dolls 2025 Benefits in Tamil : நவராத்தில் கொலு என்பது, பொம்மைகளை வரிசைப்படுத்தி வழிபடும் நிகழ்வு கிடையாது, உலக உயிர்களை ஒன்று சேர்க்கும் பெரும் வைபவம் ஆகும்.
Navaratri Golu Dolls 2025 Puja Benefits Important Significance in Tamil
Navaratri Golu Dolls 2025 Puja Benefits Important Significance in Tamil
2 min read

9 நாட்கள் நவராத்திரி விழா :

Navaratri Golu Dolls 2025 Benefits in Tamil : இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி. முப்பெரும் தேவியரை வழிபடும் இந்த விழா, 9 நாட்கள்(Navaratri 9 Days) நடைபெறுகிறது. அந்த சமயத்தில் வீடுகளில் கொலு வைத்து, இறைவனை வழிபட்டு, நைவேத்தியம் படைத்து, அவற்றை உற்றார் உறவினர்களை வரவழைத்து கொடுத்து, சமூக பிணைப்போடு கொண்டாடுவதே நவராத்தியின் சிறப்பு.

உலக உயிர்களை ஒன்று சேர்க்கும் விழா :

பஞ்ச பூதங்களில் ஒன்று மண். இவற்றால் உருவாக்கப்படும் உருவங்களை கொண்டு கொலு அமைப்பதே நவராத்திரி(Navaratri Golu Arrangement Order). பொதுவாக விழாக்களில் இறைவனை வழிபடுவது மட்டுமே இருக்கும். ஆனால், நவாராத்தியில் உலக உயிர்களை அனைத்தும், இறைவனோடு ஒன்று சேர்த்து வழிபடுவார்கள். ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உலக உயிர்களின் உருவங்களையும் வடித்து, அவற்றோடு இறை உருவங்களையும் சேர்த்து வழிபட்டால்(Navaratri Benefits in Tamil), அனைத்து நன்மைகளையும் அம்பிகை அருளுவாள் என்பது ஆழமான நம்பிக்கை.

மண் பொம்மை்களைக கொண்டு வழிபாடு :

’வாடிய பயிரே கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் வாக்கிற்கு ஏற்ப, அனைத்து உயிர்களையும் சமமாக பாவித்து வழிபடுவது தான் நவராத்திரி விழா(Navaratri Golu 2025 Rules in Tamil). கொலு வைப்பதில் ஒரு தத்துவம் அடங்கி உள்ளது. பொதுவாக, கொலு வைக்கும்போது ஒன்பது படிகள் வைத்து அதன் ஒவ்வொரு படியிலும் மண் பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

* மேல்படியில் இருந்து பொம்மைகளை அடுக்கினால், கீழே விழாமல் சரியாக வைக்க முடியும்.

* பொம்மைகளை பெட்டியில் இருந்து எடுத்ததும் துணியால் தூசி போக துடைத்து விட்டு பஞ்சில் மண்ணெண்ணெய் தொட்டு சுத்தம் செய்யலாம். பிறகு விபூதி தடவி துடைத்து விட்டால் பளிச்சென்று இருக்கும்.

* தரையில் ஜமுக்காளம் அல்லது தார்ப்பாய் விரித்து மணலை பரப்பினால் கொலு முடிந்ததும் சுத்தம் செய்வது எளிது.

* அட்டைப் பெட்டிகளில் பொம்மைகளை எடுத்து வைக்கும்பொழுது அதில் என்ன பொம்மைகள் உள்ளன என்பதை வெளிப்புறத்தில் எழுதி வைக்கவும்.

* நவராத்திரி பூஜையின்போது(Navaratri Puja) எந்த நைவேத்தியத்தையும் கொதிக்க கொதிக்க வைப்பது சரியல்ல. பதமான சூட்டில் இருக்கும்போது கிண்ணம் அல்லது தட்டில் சிறிதளவு வைக்காமல், முழுவதுமாக வைக்க வேண்டும்.

* பிளாஸ்டிக் தோரணங்களைத் தவிர்த்து, மாவிலை தோரணம் கட்டலாம். இதன்மூலம் கிருமிகளை விரட்டலாம்.

* சாம்பிராணி புகை, கற்பூரம் ஆகியவற்றை படிகளின் அருகே கொண்டு சென்றால், பொம்மைகள் மேல் புகை படியும். படிகளின் மேல் விரிக்கப்பட்டு இருக்கும் துணியில் தீப்பிடிக்கவும் வாய்ப்புண்டு. எனவே, தீபாராதனையை தூரத்தில் இருந்தே காட்ட வேண்டும்.

* சிறு மண் தொட்டிகள், கிண்ணங்களில் மண் நிரப்பி நெல், வெந்தயம், மல்லி, கம்பு போன்றவற்றை ஊன்றி வைத்தால் செடிகள் வளர்ந்து விடும். இவற்றை வைக்க கொலுவின் அழகு கூடும்.

* புதிதாக பொம்மைகளை வாங்குவது சம்பிரதாயம் என்றாலும், கொலு வைக்கும் கோயில்களுக்கும் பொம்மைகள் வாங்கி கொடுக்கலாம்.

* கொலு பார்க்க வருபவர்களுக்கு ஒரு பொம்மையுடன் தாம்பூலத்தை வழங்குவது மறக்க முடியாத பரிசாக இருக்கும்.

மேலும் படிக்க : Purattasi: புரட்டாசியில் அசைவம் கூடாது: ஆன்மீகத்தொடு கலந்த அறிவியல்

* கொலு முடிந்ததும் பொம்மைகளை பருத்தித் துணி அல்லது செய்தித்தாள்களில் சுற்றி வைத்தால் அவற்றின் நிறம் அப்படியே இருக்கும்.

* மரப்பாச்சி, மர பொம்மைகளை வார்னிஷ் அடித்து வைத்தால் புதிது போலவே பளபளக்கும்.

எனவே, கொலு வைக்கும் வழிமுறைகளை(Navaratri Golu Dolls Order in Tamil) முறையாக கடைபிடித்து, அழகான கொலு அமைத்து, வழிபாடு செய்து அம்பிகையின் அருளை முழுமையாக பெறுவோமாக.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in