பிறந்தது புரட்டாசி 2025 : திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Purattasi Month 2025 in Tirupati Tirumala Temple : புரட்டாசி மாதம் இன்று பிறந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
Purattasi Month 2025 in Tirupati Tirumala Temple in Tamil
Purattasi Month 2025 in Tirupati Tirumala Temple in Tamil
1 min read

புண்ணியங்களை அள்ளி வழங்கும் புரட்டாசி :

Purattasi Month 2025 in Tirupati Tirumala Temple : தெய்வங்களின் அருளாசியும், முன்னோர்களின் ஆசியும் ஒருசேர கிடைக்கும் மாதம் தான் புரட்டாசி. சிவபெருமான், மகாவிஷ்ணு, அம்மன், விநாயகர் வழிபாட்டிற்கு உகந்த மாதம் இது. புரட்டாசி என்று கூறினாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது திருப்பதி ஏழுமலையான் கோவில். ஏனென்றால் பெருமாளை வழிபட சிறந்த மாதமாக இது கருதப்படுகிறது.

சனிக்கிழமை விரதம் மிகவும் விசேஷம் :

புண்ணியங்களை அள்ளி வழங்கும் புரட்டாசி மாதம் இன்று பிறந்து(Purattasi 2025 Start Date) இருக்கிறது. செப்டம்பர் 20, 27, அக்டோபர் 4, 11 என புரட்டாசியில் நான்கு சனிக்கிழமை வருகிறது. அப்போது விரதம் இருந்து பெருமாளை வழிபடுவது மிகவும் உகந்ததாகும்.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் :

புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏழுமலையானை தரிசனம்(Tirupati Temple Poojai in Purattasi) செய்வதற்காக, பக்தர்கள் திரண்டதால், திருமலையில் உள்ள வைகுண்டம் குழு காம்ப்ளெக்ஸிஸ் 31 அறைகளும் நிரம்பியுள்ளது. கிருஷ்ண தேஜா ஓய்வறை வரை 2 கிலோ மீட்டருக்கு தொலைவுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

சுவாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் :

பக்தர்கள் வருகை அதிகரிப்பால், இலவச தரிசனத்தில் சாமி தரிசனம்(Tirupati Tirumala Darshan Timing) செய்வதற்கு 18 முதல் 24 மணி நேரம் ஆகும் என தேவஸ்தானம் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதே போன்று சர்வ தரிசனம் டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு 7 மணி நேரமும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்து 67 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியலில் ரூ.3 கோடியே 87 லட்சத்தை காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்.

மேலும் படிக்க : திருப்பதியில் செப்.24 முதல் பிரம்மோற்சவம் : 28ம் தேதி ’கருடசேவை’

புரட்டாசி முழுவதும் மலையப்ப சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால், தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in