

சபரிமலை ஐயப்பன் கோவில் :
Sabari Yatra 2025 Special Train announcement for Southern Districts of Tamilnadu : கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு தோறும் திறந்திருக்கும் கோவில் கிடையாது. மாதப் பிறப்பின் போதும், மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளின் போது மட்டுமே நடை திறந்து இருக்கும்.
நவ. 17 மண்டல பூஜை தொடக்கம்
மாலை அணிந்து 48 நாட்கள் கடுமையான விரதம் இருந்து, இருமுடி கட்டி மலையேறி செல்லும் பக்தர்கள் ஐயப்பனை வழிபடுவார்கள். அந்த வகையில் வரும் 17ம் தேதி மண்டல பூஜைகள்(Sabarimala Mandala Pooja 2025 Date) தொடங்குகின்றன. 41 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை முடிவுறும். 41 நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
Sabarimala Ayyappa Temple Special Bus :தனி வாகனங்களில் பயணம் செய்வோர் அதிகம் என்றாலும், கொல்லம் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலம் ஆயிரக் கணக்கானோர் சபரிமலைக்கு சென்று திரும்புகின்றனர். ஏற்கனவே, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தென்மாவட்ட ஐயப்ப பக்தர்களுக்காக மதுரை வழியாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வியாழன் தோறும் சிறப்பு ரயில்
மகாராஷ்டிரா - கொல்லம் இடையே தென்காசி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் ஹஜூர் சாஹிப் நந்தெத் ரயில் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயிலானது (07111), சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கேரளாவின் கொல்லத்தை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில்
இந்த ரயில் நவம்பர் 20 ஆம் தேதி முதல் ஜனவரி 15 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. மறுமார்க்கத்தில் கொல்லம் ரயில் நிலையத்திலிருந்து நவம்பர் 22 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை, வாரந்தோறும் சனிக்கிழமை அதிகாலை 5:40 மணிக்கு மகாராஷ்டிராவிற்கு சிறப்பு ரயில் (07112) இயக்கப்படும். இந்த ரயில் அடுத்த நாள் இரவு 9:30 மணிக்கு ஹஜூர் சாஹிப் நந்தெத்தைச் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயிலானது திருப்பதி, சித்தூர், காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜாபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை மற்றும் புனலூர் வழியாக செல்லும். எனவே, இந்த ரயில் தென் மாவட்ட பக்தர்கள் சபிரமை செல்ல பெரும் வசதியாக அமையும்.
=====================