மண்டல பூஜை முன்பதிவு நாளை தொடக்கம் : தினமும் 90,000 பக்தர்கள்

Sabarimala Mandala Pooja 2025 Online Booking Dates in Tamil : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்கான முன்பதிவு நவம்பர் 1ம் தேதி ( நாளை ) தொடங்குகிறது.
Sabarimala Mandala Pooja 2025 Online Booking Opening Dates in Tamil
Sabarimala Mandala Pooja 2025 Online Booking Opening Dates in TamilSabarimala Ayyappa Swamy Temple - Kerala
1 min read

சபரிமலை - மண்டல பூஜை 2025 :

Sabarimala Mandala Pooja 2025 Online Booking Dates in Tamil : கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவலில் நடைபெறும் விழாக்களில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் காலக் கட்டங்களில் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து, ஐயப்பனை தரிசித்து செல்வார்கள்.

நவம்பர் 1 முதல் ஆன்லைன் முன்பதிவு

கார்த்திகை ஒன்றாம் தேதி மண்டல பூஜையானது தொடங்கும். அதன்படி இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, நவம்பர் 16ம் தேதி(Sabarimala Ayyappa Temple Opening Dates 2025 in Tamil) திறக்கப்படுகிறது. மண்டல பூஜைகள் நிறைவு பெற்ற பிறகு, டிசம்பர் 27ம் தேதி அடைக்கப்படுகிறது. இந்நிலையில், ஐயப்பன் தரிசனத்திற்கான இணையதள முன்பதிவு நாளை தொடங்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

தினமும் 90,000 பக்தர்கள் தரிசிக்கலாம்

அதன்படி, இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்தவர்களில் 70 ஆயிரம் பக்தர்கள் நாள்தோறும் ஐயப்பனை வழிபட அனுமதிக்கப்படுவார்கள். ஸ்பாட் புக்கிங் எனப்படும் நேரில் சென்று முன்பதிவு செய்தவர்களில், நாள்தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்பப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை காலத்தின் போது, இதே நடைமுறை பின்பற்றப்படும். அந்த வகையில், 90 ஆயிரம் பக்தர்கள் தினமும் ஐயப்பனை தரிசிக்கலாம்.

பக்தர்கள் ஓய்வு - பிரமாண்ட பந்தல்கள்

தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள் பம்பையில் ஓய்வெடுக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 10 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு எடுக்கும் வகையில் 10 இடங்களில் பந்தல்கள் அமைக்க தேவசம் திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க : ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ் : நவ.15 முதல் சிறப்பு பேருந்துகள்

சபரிமலை கோவில் - வழிபாட்டு நேரம்

சபரிமலை கோயில் அதிகாலை 300 மணிக்கு நிர்மால்யம் சடங்குடன் திறக்கப்பட்டு(Sabarimala Ayyappa Temple Timing in Tamil), ஹரிவராசனத்திற்குப் பிறகு இரவு 11:00 மணிக்கு மூடப்படும். முக்கிய பூஜைகளில் நெய்யாபிஷேகம் (அதிகாலை 3:30 மணி முதல் 11:00 மணி வரை), மதியம் 12:30 மணிக்கு உச்சபூஜை, மாலை 6:30 மணிக்கு தீபாராதனை ஆகியவை அடங்கும். தினசரி ஏற்பாடுகளுக்காக கோயில் மதியம் 1:00 மணி முதல் 3:00 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

=======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in