அதிமுக தேர்தல் அறிக்கை : 297 அறிவிப்புகள்
Edappadi Palanisamy Announced AIADMK Election Manifesto for 2026 Assembly Election : சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவின் தேர்தல் அறிக்கையாக 297 அறிவிப்புகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்
ஆண்களுக்கும் இலவச பேருந்து
பெண்களை போல ஆண்களுக்கும் இலவச பேருந்து வசதி ,அதாவது ஆண்களும் நகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது
மகளிருக்கு உதவி தொகை 2000 ,இலவச பிரிட்ஜ்
மகளிருக்கு மாத உதவி தொகை 2000 வழங்கப்டும் ,அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரசி ஒரு லிட்டர் ஆயில் வழங்கப்டும் ,ஒவ்வொரு குடும்பங்களுக்கும் மூன்று சமையம் எரிவாயு சிலிண்டர் வழங்கபடும் என்றும் ,னைத்து குடும்பங்களும் இலவச பிரிட்ஜ் தரப்படும்
முதியோர் உதவித்தொகை 2000 உயர்வு
முதியோர் உதவித்தொகை 2000 மாக உயர்த்தி தரப்படும் என்றும் தேர்தல் அறிக்கையாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இருசக்கர வாகனம் வாங்க மானியம்
5 லட்சம் பேருக்கு இலவச இருசக்கர வாகனம் வாங்க 25000 மானியமாக வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையாக தெரிவிக்கப்பட்டுளள்து .
ஊரக வேலைத்திட்டம் 150 நாள் ,செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் ,வங்கிகளின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஊரக வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றும் அறிவியப்பு வெளியாயுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தேர்தல் ,2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க :அதிமுக தேர்தல் வாக்குறுதி 3.0 : ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 கருணைத் தொகை : பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் 2,000
கொத்தடிமை இல்லா தமிழ்நாடு
கொத்தடிமை இல்லா மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்றும் டெஹ்ரதல் அறிக்கையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதம் மாறினாலும் பட்டியலின மக்களுக்கான சலுகை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2,000
இரண்டாவது வாக்குறுதியாக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் 2,000/- ரூபாயும்; +2 வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000/- ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்