2,600 தடவை பயணம்,3,350 முறை பெருமாள் தரிசனம் :70 வயது ரமணமூர்த்தி
திருப்பதி-திருமலை ஏழுமலையான்
70 Year Old Ramanamoorthy Visit Tirupati Tirumala Record Time : உலகப் புகழ் பெற்ற திருப்பதி வெங்கடேச பெருமாளை ஒருமுறை தரிசிப்பது என்பதே பெரிய பாக்கியம். சிலர் ஆண்டு தோறும் ஏழுமலையானை தரிசிப்பார்கள். இவர்களின் பக்தியை எல்லாம் மிஞ்சும் வகையில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறார் திருப்பதியை சேர்ந்த ரமணமூர்த்தி.
3,350 முறை ஏழுமலையான் தரிசனம்
இவர் ஒருமுறை அல்ல, பலமுறை அல்ல, 3,350 முறை மலையப்பனை தரிசித்து இருக்கிறாராம். இது எப்படி சாத்தியமானது. திருப்பதியை பூர்வீக இடமாக கொண்டு, அங்கேயே வசித்து வருவதால், ரமண மூர்த்தியால் இந்த மைல்கல்லை எட்ட முடிந்து இருக்கிறது.
2,600 முறை திருமலை நடைபயணம்
மற்றொரு சிறப்பு என்னவென்றால், இவர் ஒருமுறை கூட வாகனங்களில் திருமலைக்கு சென்றது. ஒவ்வொரு முறையும் நடந்தே சென்று, அதாவது அலிபிரி வழியாக சென்று பெருமாளை சேவித்து இருக்கிறார். இதன் கணக்கை கேட்டாலும் வியப்பு தான் மிஞ்சுகிறது. 2,600 முறை இவர் நடந்தே திருமலைக்கு சென்று இருக்கிறாராம்.
70 வயதில் திருமலை புனித பயணம்
அலிபிரி நடைபாதை என்றது சுமார் 12 கி.மீ. தூரம் கொண்டது. 14 வயது முதல் நடந்து செல்லும் ரமணமூர்த்தி, தற்போது 70 வயதாகி விட்ட நிலையிலும், தனது பயணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. திருமலைக்கு புனித பயணம் மேற்கொள்வதையும் நிறுத்தவில்லை. கூட்டம் அதிகம் இல்லாத நாட்களில் ஒரே நாளில் இரண்டு முறை கூட மலையப்பனை சேவிக்கும் பாக்கியம் இவருக்கு கிடைத்து இருக்கிறது.
திருமலை செல்ல இரண்டு நடைபாதைகள்
அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு இடங்கள் வழியாக பக்தர்கள் நடந்தே திருமலைக்கு செல்கிறார்கள். அலிபிரியில் 3550 படிகள் உள்ளன. இது மொத்தம் 12 கி.மீ. தூரமாகும். இங்கு 4 கோபுரங்கள் உள்ளன. இந்த நடைபாதையில் மழை, வெயிலில் இருந்து பக்தர்களை காக்க கூரைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே கடைகளும் உள்ளன. இந்த பாதயாத்திரை வழியாக வருவோருக்கு காளி கோபுரத்தில் டோக்கன் வழங்கப்படும். அந்த டோக்கனுடன் திருமலைக்கு சென்றால் அங்கு நடந்து செல்வோருக்கு என தனி வரிசை உள்ளது. விரைவில் சுவாமி தரிசனம் செய்யலாம்.
மேலும் படிக்க : ’தீபாவளி பண்டிகை’ : கொண்டாடுவது எப்படி?, ஆச்சரியமூட்டும் தகவல்கள்
ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை
அது போலவே, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை உள்ளது. அது அலிபிரியை விட செங்குத்தானது. 2.1 கி.மீ. தூரம் கொண்டது. 2400 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். இந்த வழியாகத்தான் பெருமாளே திருப்பதிக்குச் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த வழியாக செல்லும் பக்தர்களுக்கும் 80 சதவீத தூரத்தை கடந்ததும் டோக்கன் வழங்கப்படும். அதை கொண்டு குறைந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்துவிடலாம்.
================