
Edappadi Palanisamy About Anna Arivalayam : தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்டம் குன்னூரில் திரண்டு இருந்த பொதுமக்களிடையே உரையாற்றினார்.
இன்னும் 7 மாதங்களே திமுக ஆட்சி :
திமுக ஆட்சிக்கு வந்து 52 மாதம் முடிந்து விட்டது. இன்னும் 7 மாதமே இருக்கிறது. குன்னூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா? விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்து விட்டது. வேலை வாய்ப்பு குறைந்து, செலவு அதிகரித்து விட்டது. நீலகிரியில் ஆன்லைன் பாஸ் முறையில் உள்ளது.
இ பாஸ் ரத்து - எடப்பாடி வாக்குறுதி :
திமுக நீதிமன்றத்தில் சரியாக வாதாடாத காரணத்தினால் இப்படிப்பட்ட நிலை வந்திருக்கிறது. குறிப்பிட்ட அளவு வாகனங்கள் தான் நீலகிரிக்கு(Nilgiris E Pass) செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இதனால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீசனில்தான் அவர்களுக்கு உரிய வருமானம் கிடைக்கும். திமுக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் இன்றைக்கு 6 ஆயிரம் வாகனங்களுக்கு மேல் வர முடியாது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நீதிமன்றத்தில் மக்களின் பிரச்னையை எடுத்துச் சொல்லி இதற்கு ஒரு தீர்வு காணப்படும்(ADMK Promises). குன்னூர், கூடலூர், உதகை வியாபாரிகளை பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க அதிமுக அரசு துணை நிற்கும்.
திமுக ஆட்சியில் ஊழல், ஊழல் :
திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை. போதைப் பொருள் இல்லாத இடமே கிடையாது. இதனால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிகிறார்கள். திமுக ஆட்சியில் எல்லா துறையிலும் ஊழல்.
கனிமொழிக்கு பதிலடி :
திமுக எம்பி கனிமொழி(Kanimozhi MP) பேசுகிறார். அதிமுக கட்சி அலுவலகம் டில்லியில், உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டில் இருக்கிறது என்று பேசுகிறார். அதிமுக அலுவலகம் சென்னையில்தான் இருக்கிறது. வேண்டுமானால் வந்து பாருங்கள். அதிமுகவை உடைக்க, பிளக்க சதி செய்தீர்கள், எந்த விதத்திலும் அதிமுக செயல்படக் கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் மூலமாக வெவ்வேறு விதத்தில் முயற்சி செய்தீர்கள், அத்தனையும் அதிமுக தொண்டர்களால் முறியடிக்கப்பட்டது.
மேலும் படிக்க : ADMK Alliance : 210 தொகுதிகளில் வெற்றி நிச்சயம் : எடப்பாடி உறுதி
அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா :
திமுகவுக்கு சோதனை வந்தபோது, கட்சி அலுவலகத்தை பிரிந்து சென்றவர்கள் கைப்பற்ற நினைத்தபோது, அதைக் காப்பாற்றிக் கொடுத்தது ஜெயலலிதா தான் என்பதை மறந்துவிடாதீர்கள். திமுக இரண்டாகப் போனது கருணாநிதி தடுமாறிக் கொண்டிருந்தார், அப்போது சிலர் அறிவாலயத்தை கைப்பற்ற நினைத்தபோது காப்பாற்றிக் கொடுத்தது அதிமுக. அதிமுகவுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்துதான் பழக்கம். ஆனால் திமுக மக்களுக்கும் உதவிசெய்தது கிடையாது, கூட்டணி கட்சிக்கும் உதவி செய்த வரலாறு கிடையாது” இவ்வாறு எடப்பாடி உரையாற்றினார்.
===============