விவசாயிகளை பழிவாங்கும் திமுக அரசு : எடப்பாடி பழனிசாமி காட்டம்
'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' :
Edappadi Palanisamy Slams DMK Government : 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளார். மூன்றாம் கட்ட பிரசாரத்தை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வேப்பனஹள்ளி, தளி, ஓசூர் சட்டசபை தொகுதிகளில் அவர் மேற்கொண்டார். ராயக்கோட்டையில் பேசியபோது, 'பை பை ஸ்டாலின்; மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என மூன்று முறை கூறினார்.
திமுகவுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி :
அதிமுக ஆட்சியில், வேப்பனஹள்ளி தொகுதியில் இந்தோ - இஸ்ரோ சாகுபடி பயிற்சி மையத்தை ஏற்படுத்தினோம். ஓசூரில் பிரமாண்ட சர்வதேச மலர்(Hosur Flower Market) ஏல மையம், 20 கோடி ரூபாயில் கட்டினோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, விவசாயிகளை பழிவாங்கும் வகையில், திமுக அரசு அப்படியே பூட்டி வைத்துள்ளது.
மலர் விவசாயிகள், மானியம் நிறுத்தம் :
மலர் விவசாயிகளுக்கான மானியத்தையும் திமுக அரசு நிறுத்தி விட்டது. மாம்பழம் விலை வீழ்ச்சியால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள்(Krishnagiri Farmers) கடுமையாக பாதிக்கப் பட்டனர். அவர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும். மா விவசாயிகளுக்காக அதிமுக நடத்திய போராட்டங்களையும், விவசாயிகளின் துயரங்களையும் திமுக ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
விவசாயிகளுக்கு எடப்பாடி வாக்குறுதி :
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், விவசாய தொழிலாளர்கள், மலைவாழ் மக்களுக்கு, இப்போது கட்டப்படும் வீடுகள் போல இல்லாமல், அற்புதமான கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். வீட்டு மனை இல்லா விட்டால், புதிதாக வாங்கித் தந்து வீடு கட்டிக் கொடுப்போம்.
மேலும் படிக்க : EPS : போலி வாக்காளர்களால் திமுக வெற்றி : எடப்பாடி கடும் விமர்சனம்
பெண்களுக்கு அற்புதமான சேலைகள் :
அதிமுக அரசு அமைந்ததும், தீபாவளி பண்டிகையின் போது பெண்களுக்கு அற்புதமான இலவச சேலைகள் வழங்கப்படும். திமுக அரசு கைவிட்ட திட்டங்களையும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
============