EPS : போலி வாக்காளர்களால் திமுக வெற்றி : எடப்பாடி கடும் விமர்சனம்

Edappadi Palaniswami Criticize DMK on Fake Voters : போலி வாக்காளர்களால் வெற்றி பெற்ற கட்சி திமுக என்று, எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியிருக்கிறார்.
ADMK Chief Edappadi Palaniswami Criticize DMK on Fake Voters in Virudhunagar Road Show
ADMK Chief Edappadi Palaniswami Criticize DMK on Fake Voters in Virudhunagar Road Show.com/EPSTamil
1 min read

உருப்படியான திட்டங்கள் இல்லை :

Edappadi Palaniswami Criticize DMK on Fake Voters : தேர்தல் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள அவர், விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பொதுமக்களிடையே உரையாற்றினார். ” திமுக ஆட்சிக்கு வந்து, 50 மாதங்கள் ஓடி விட்டன. உருப்படியான திட்டங்கள் எதுவுமில்லை. ஆனால், தமிழகம் வளர்ந்துவிட்டது என்பது போன்ற தோற்றத்தை ஆளுங்கட்சியும், அதன் கூட்டணிகளும் பொய்யாக உருவாக்குகின்றன.

துரைமுருகனுக்கு பதிலடி :

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஏன் என, அமைச்சர் துரைமுருகன்(Minister Duraimurugan on EPS) கேட்கிறார். 86 வயதில் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார்.

போலியான வாக்காளர்களால் திமுக வெற்றி :

திமுக தான் போலியாக வாக்காளர்களை சேர்க்கிறது. சென்னை ஆர்.கே.நகர்(RK Nagar) தொகுதியில் மட்டும் 27,779 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.

நீதிமன்றம் சென்று ஆதாரத்தோடு வாதாடினோம்; இப்போது நீக்கியிருக்கின்றனர். ஒரு தொகுதியில் 27,779 பேர் என்றால், இந்த ஆட்சியில் எத்தனை போலி வாக்காளர்கள் இருப்பர்? என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

போலி வாக்காளர்கள் சேர்ப்பு :

பெரம்பூர், தி.நகர் உள்ளிட்ட சென்னையின் பல தொகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள்(Fake Voter in Chennai) சேர்க்கப்பட்டுள்ளனர். இப்படி போலி வாக்காளர்கள் மூலமாகவே திமுக சென்னையில் வெற்றி பெறுகிறது. இது, ஆதாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க : திமுகவை வீழ்த்த வலிமையான கூட்டணி தேவை : எடப்பாடி திட்டவட்டம்

போலி வாக்காளர்கள், கள்ள வாக்குகள் :

சென்னை மாநகராட்சித் தேர்தலில், கள்ள ஓட்டு போட முயன்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். ஆனால், ஒப்படைத்தவரை கைது செய்துவிட்டு, கள்ள ஓட்டு போட்டவரை விடுவித்தனர். கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்தியதிலும் முறைகேடு தான். திமுக அரசே, அந்தத் தேர்தலை ரத்து செய்தது.அந்தக் காலத்து மன்னரை போல அமைச்சர்களை சொல்வதை நம்பி முதல்வர் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy) பிரசாரம் செய்தார்.

=================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in