
துணை ஜனாதிபதி தேர்தல் :
Vice President Candidate C.P. Radhakrishnan : குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே, புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்ந்து எடுக்க தேர்தல் நடத்தப்பட்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் வேட்பாளர் தேர்வில் ஆர்வம் காட்டின.
NDA வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் :
இந்தநிலையில், டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்பிக்கள் கூட்டத்தில், தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனை(CP Radhakrishnan) தேர்தலில் நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வரும் 21ம் தேதி சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.
அண்ணாமலையால் கோவிலில் எடப்பாடி :
இந்தநிலையில், தனது சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மஹாராஷ்டிரா ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழக எம்பிக்களுக்கு கோரிக்கை :
எனவே, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்பிக்களும், கட்சி பேதமின்றி, சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க : RSS to துணை ஜனாதிபதி : ’சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்’
தமிழருக்கு வாய்ப்பு ஆதரியுங்க :
இன்று தமிழகத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டின் துணை ஜனாதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் வருவதற்கு ஒரு வாய்ப்பு tற்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, கட்சி பேதமின்றி திமுக உட்பட அனைத்து கட்சிகளும் அவரை ஆதரிக்க வேண்டும்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy) கேட்டுக் கொண்டார்.
=============