திமுகவை வீழ்த்த வலிமையான கூட்டணி தேவை : எடப்பாடி திட்டவட்டம்

Edappadi Palanisamy on ADMK Alliance : அரசியல் ரீதியாக சக்தி வாய்ந்த எதிரியான திமுகவை வீழ்த்த வலிமையான கூட்டணி அவசியம் என்று, எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.
Edappadi Palaniswami On Strong Alliance is Necessary to defeat DMK Party
Edappadi Palaniswami On Strong Alliance is Necessary to defeat DMK Party
1 min read

எடப்பாடி தீவிர சுற்றுப் பயணம் :

Edappadi Palanisamy on ADMK Alliance : சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக மேலும் சில கட்சிகள் தங்களது கூட்டணிக்கு வரலாம் என்று தெரிவித்து வருகிறார். தவெக, பாமக உள்ளிட்ட கட்சிகள் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

திமுக கூட்டணிக்கு பயம் :

இந்தநிலையில் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, “ அதிமுக - பாஜக கூட்டணியைப்(ADMK BJP Alliance) பார்த்து அச்சப்படும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தவறான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். அமைச்சரவையில் மற்ற கட்சிகள் இடம் பெறுவது குறித்த கேள்விக்கு யூகத்தில் அடிப்படையில் பதிலளிக்க முடியாது என்று எடப்பாடி தெரிவித்தார்.

மேலும் படிக்க : EPS : சிறுபான்மையினரை ஏமாற்றும் திமுக : வென்டிலேட்டரில் ஆட்சி

வலிமையான கூட்டணி அவசியம் :

அரசியல் ரீதியாக சக்தி வாய்ந்த எதிரியான திமுகவை வீழ்த்த வலிமையான கூட்டணி அவசியம். இதை மறுக்கவில்லை. அதை நோக்கியே அதிமுக செயல்பட்டு வருகிறது. 2026ல் ஆட்சி மாற்றம் என்பதை எங்கள் குறிக்கோள். அதை பின்பற்றி அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in