GST குறைப்பு ’பொருளாதார வளர்ச்சிக்கு’ உதவும் : EPS பாராட்டு

Edappadi Palanisamy on GST 2.0 Reforms : ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்து இருப்பதற்கு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ADMK Edappadi Palanisamy on GST 2.0 Reforms Next Gen Reforms in GST Council Meeting
ADMK Edappadi Palanisamy on GST 2.0 Reforms Next Gen Reforms in GST Council Meeting
1 min read

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம், விலை குறையும் :

Edappadi Palanisamy on GST 2.0 Reforms : டெல்லியில் நடைபெற்ற 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், GST-யில் நடைமுறையில் உள்ள நான்கு அடுக்குகளை, இரண்டாக குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மறு சீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி, வரும் 22ம் தேதி முதல் 5 மற்றும் 18 என்ற இரண்டு விகிதங்களில் மட்டுமே ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும். இதன் காரணமாக உப்பு முதல் கார் வரை, பெரும்பாலான பொருட்களின் விலை குறைகிறது.

அதிமுக மனமார வரவேற்பு :

மத்திய அரசின் இந்த நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்து இருக்கும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக சார்பாக, ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.

பிரதமருக்கும், நிர்மலாவுக்கும் நன்றி :

மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்குத் தலைமைத்துவம் வகித்ததற்காக பிரதமர் மோடிக்கும், ஜிஎஸ்டி வரி விகிதத்தை கட்டமைக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும்(EPS on Nirmala Sitharaman) நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் படிக்க : GST 2.O Reforms : 2 அடுக்குகளாக குறைப்பு: 22ம் தேதி முதல் அமல்

பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் :

அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண் பொருட்கள் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் இரண்டு அடுக்குகளுக்கு (5% & 18%) நிவாரணம் வழங்கி இருப்பது முன்னேற்றத்தை உறுதி செய்யும். இது நுகர்வோர் நம்பிக்கையை ஊக்கப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளது” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி(Edappadi Palaniswami) வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in