’OPS, Sasikala,TTV’+கைகோர்க்கும் செங்கோட்டையன்!: EPSக்கு நெருக்கடி

Sengottaiyan vs Edappadi Palanisamy Issue : ஓபிஎஸ், சசிகலா, டிடிவியுடன் சேர்ந்து புதிய அணி அமைக்க செங்கோட்டையன் திட்டமிட்டு இருப்பதாகவும், நாளை அதிகாரப்பூர்வமாக இதை அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.
Sengottaiyan vs Edappadi Palanisamy Issue Will Join With OPS Sasikala TTV Dhinakaran
Sengottaiyan vs Edappadi Palanisamy Issue Will Join With OPS Sasikala TTV Dhinakaran
2 min read

எடப்பாடி மீது செங்கோட்டையன் அதிருப்தி :

Sengottaiyan vs Edappadi Palanisamy Issue : அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீது 6 மாதங்களாக அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனால் எடப்பாடியை சந்திப்பதை தவிர்ப்பதோடு, அவர் பங்கேற்கும் கூட்டங்களையும் புறக்கணித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.

செங்கோட்டையன் முக்கியத்துவம் குறைப்பு :

இதனால், கடுப்பான எடப்பாடி பழனிசாமி, கட்சியில் செங்கோட்டையனுக்கு அளித்து வந்த முக்கியத்துவத்தை படிப்படியாக குறைத்தார்(Sengottaiyan vs EPS). இதன்காரணமாக கடும் அதிருப்தி அடைந்த செங்கோட்டையன் சில தினங்களுக்கு முன்பு, தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி 5ம் தேதி மனம் திறக்க உள்ளதாக பேட்டியளித்தார்.

ஆதரவாளர்களுடன் ஆலோசனை :

மேலும், தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டது, எடப்பாடி தரப்பை அதிர்ச்சி அடையச் செய்தது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளுவது, கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கொண்டு வருவது பற்றி செங்கோட்டையன்(Sengottaiyan ADMK) தனது கருத்தை ஆதரவாளர்களிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ், டிடிவி உடன் செங்கோட்டையன் :

ஒன்றுபட்ட அதிமுகவால் மட்டுமே திமுக கூட்டணியை வீழ்த்தி, ஆட்சியை பிடிக்க முடியும் என செங்கோட்டையன் கருதுகிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி(Edappadi Palaniswami vs Sengottaiyan) உடன்பட மாட்டார் என்பதால், அதிமுகவில் இருந்து வெளியேறி சசிகலா, ஓபிஎஸ், டிடிவியுடன் சேர்ந்து புதிய அணி உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது(Sengottaiyan Join With OPS Sasikala TTV Dhinakaran). இதற்கான அறிவிப்பை நாளை அவர் வெளியிடுவார் எனவும் கூறப்படுகிறது.

எடப்பாடி தூது, மறுத்த செங்கோட்டையன் :

செங்கோட்டையன் பற்றி இதுவரை எடப்பாடி வாய் திறக்காமல் உள்ளார். மேலும், அவரை சமானதானப்படுத்தும் முயற்சியிலும் அதிமுக தலைமை ஈடுபட்டதாக தெரிகிறது. இதற்காக அனுப்பப்பட்ட குழுவை சந்திக்க செங்கோட்டையன் மறுத்து விட்டதாகவும், தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருப்பதாகவும், அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

செங்கோட்டையன் தலைமையில் புதிய அணி? :

கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் செங்கோட்டையன். குறிப்பாக சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை ஒருங்கிணைக்க வேண்டும் என்பது அவரது நிலைப்பாடாக உள்ளது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதிமுகவில் இருந்து வெளியேறும் ஒரு முடிவை செங்கோட்டையன் எடுத்தால் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும், குறிப்பாக கொங்கு மண்டலத்தில் வெற்றி என்பதே கேள்விக்குறியாகி விடும் என்று அதிமுக தொண்டர்கள் கருதுகின்றனர்.

10 ஆயிரம் பேரை திரட்டும் செங்கோட்டையன் :

நாளை (5ம் தேதி) நடைபெறும் செய்தியாளர் சந்திப்பின் போது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் தனது பலத்தை காண்பிக்க செங்கோட்டையன் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அதிமுகவினர் திரண்டால், அது எடப்பாடி தரப்பிற்கு பெரும் பின்னடைவாக இருக்கும். செங்கோட்டையனுக்கு அதிமுக முன்னாள் எம்பி சத்தியபாமா நேரடியாக ஆதரவு தெரிவித்த நிலையில், வரும் நாட்களில் மேலும் பலர் இவ்வாறு முன் வந்தால், எடப்பாடி தரப்பு என்ன செய்யும் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

மேலும் படிக்க : எடப்பாடியுடன் மோதலா? : செப். 5ல் மனம் திறக்கிறார் ‘செங்கோட்டையன்’

எடப்பாடிக்கு முற்றும் நெருக்கடி :

கே. ஏ. செங்கோட்டையன், ஓபிஎஸ், சசிகலா, டிடிவி கைகோர்த்தால் அவர்களை எப்படி எடப்பாடி சமாளிப்பார்? அதிமுகவில் உள்ளவர்கள் அணி தாவினால் என்ன செய்வார்? பாஜகவை எப்படி சமாளிப்பார்? போன்ற கேள்விகள் அடுக்கடுக்கான எழுகின்றன. இனி வரும் நாட்கள் எடப்பாடிக்கு சவாலாகவே இருக்கும். அதிலிருந்து மீண்டு எழுவாரா? அல்லது ஓபிஎஸ், சசிகலா, டிடிவியை ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in