
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் :
Sengottaiyan vs Edappadi Palaniswami Issue : அதிமுக முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் ஜெயலலிதா இருந்த போது கட்சியில் முக்கியத்துவம் பெற்ற நபராக இருந்தவர். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் :
கடந்த பிப்ரவரி மாதம் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை(Athikadavu Avinashi Project) நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அன்னூரில் நடந்த அந்தப் பாராட்டு விழாவில், மேடையில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இல்லை என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார் செங்கோட்டையன்.
எடப்பாடியை புறக்கணிக்கும் செங்கோட்டையன் :
அதன்பிறகு பல்வேறு சந்தர்ப்பங்களில் எடப்பாடிக்கு எதிராக தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தினார். அதன் பின்னர் பல்வேறு தருணங்களிலும் அவர் இபிஎஸ் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார் செங்கோட்டையன்(Sengottaiyan vs EPS). 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எடப்பாடியின் பிரச்சார பேரணி, கோபிசெட்டிபாளையம் சென்ற போது, வரவேற்க செங்கோட்டையன் வரவில்லை.
செப். 5ம் தேதி மனம் திறக்கிறேன் :
இந்தநிலையில், தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இரண்டு நாட்களாக இந்த ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு முத்தாய்ப்பாக இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வருகிற 5ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) காலை 9 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து(Sengottaiyan Press Meet in Erode), மனம் திறந்து பேச உள்ளேன். அதுவரை செய்தியாளர்கள் பொறுமை காக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.
ஆதரவாளர்களுடன் ஆலோசனை
கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டமா? என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பு உள்ளது என்று மட்டும் தெரிவித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி தொடர்கிறதா? என்ற கேள்விக்கு சிரித்து முகத்துடன் கையெடுத்து கும்பிட்டுச் சென்றார்.
என்ன செய்வார் செங்கோட்டையன்? :
ஏற்கனவே, எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், தனி ஆலோசனை, செப்.5ம் தேதி முக்கிய அறிவிப்பு என அதிமுகவில் சலசலப்பை கிளப்பி விட்டு இருக்கிறார். அவர் என்ன முடிவை எடுக்கப் போகிறார்? வேறு கட்சிக்கு செல்வாரா? அவரை பின்னால் இருந்து இயக்குவது யார்? என அடுக்கடுக்கான கேள்விகள் அதிமுக தொண்டர்கள் இடையே எழுந்துள்ளது.
மேலும் படிக்க : 'ஸ்டிக்கர்' ஒட்டுகிறார் ஸ்டாலின் : செங்கோட்டையன் விமர்சனம்
அதிமுக முன்னாள் எம்பிக்கள் ஆன அன்வர்ராஜா, மைத்ரேயன் ஆகியோர் அண்மையில் திமுக இணைந்தனர்(Anwar Raja joins DMK). இந்த வரிசையில் செங்கோட்டையன் இணைவாரா? அல்லது தனிக்கட்சி தொடங்க இருக்கிறாரா? என்ற ஐயங்களுக்கு 5ம் தேதி விடை கிடைக்கும்.
=============