
அதிமுகவை மீட்ட 1998 மக்களவை தேர்தல் :
Kadambur Raju About Jayalalithaa : 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து, 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவும் தோற்றுப் போனார். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது. அதே ஆண்டு டிசம்பர் மாதம், ஊழல் வழக்குகளில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். ஆனால், 1998ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. பிரசாரத்திற்காக அத்வானி கோவை வந்த போது தொடர் குண்டு வெடிப்பில் 50 பேர் பலியாகினர். இந்த சம்பவம் திமுகவை பின்னடைவை ஏற்படுத்தி, மக்களவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி(ADMK BJP Kootani) 30 இடங்களை கைப்பற்றியது. இதில் அதிமுக மட்டுமே 18 இடங்களை வென்றது.
அதிமுகவை நம்பிய பாஜக :
மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு பெரும்பான்மையில்லை. ஆனால் பாஜகவும், அதிமுகவை பெரிதும் நம்பி ஆட்சி அமைத்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் பாரதப் பிரதமரானார். ஆனால் பாஜக ஆட்சி அமைத்த சில நாள்களிலேயே ஜெயலலிதா பாஜகவுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கினார். இதில் முக்கியமான அழுத்தம் "திமுக ஆட்சியை கலைக்க வேண்டும்" என்பதே. நிபந்தனைகளுக்கு வாஜ்பாய் பணியாததால், 1999ல் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சிக்கு அளித்த ஆதரவை ஜெயலலிதா திரும்ப பெற்றார். ஆட்சி கவிழ மீண்டும் தேர்தல் வந்தது.
வருத்தப்பட்டு பேசிய வாஜ்பாய் :
"இந்த 14 மாதங்கள் என் அரசியல் வாழ்வின் மிக முக்கியமான மாதங்கள். இந்த 14 மாதங்களில் நான் அனுபவித்த துன்பங்களை, 1975 – 1977 காலகட்டத்தில், பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை காலத்தின்போது என்னை சிறையில் அடைத்த போது கூட நான் அனுபவத்தது இல்லை. காலையில் தூங்கி எழும்போது இன்று இரவு நான் பிரதமராக படுக்க செல்லுவேனா அல்லது அரசு கவிழ்ந்து பதவி இழந்து படுக்க செல்லுவேனா என்று எனக்குத் தெரியாது" இவ்வாறு வாஜ்பாய் வருத்தப்பட்டு பேசி இருந்தார்.
ஜெயலலிதா செய்த வரலாற்று பிழை :
இந்தநிலையில், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ(Kadambur Raju), 1998ல் பாஜக கூட்டணியில் நாங்கள் இருந்தோம். ஆனால் 1999ல் ஆதரவை வாபஸ் வாங்கியது மாபெரும் தவறு. ஜெயலலிதா செய்த இந்த வரலாற்று பிழையால், திமுக மத்தியில் 14 ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வகித்தது.
ஆட்சியை கவிழ்த்தது தவறுதான் :
கூடா நட்பு கேடாய் முடியும் என்பது போல, சுப்பிரமணிய சுவாமி பேச்சைக் கேட்டு ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக அரசை கவிழ்த்தது வரலாற்று பிழைதான். பாஜக-திமுக கூட்டணி அமையவும் நாங்கள் காரணமாகி விட்டோம்.
அதிரவைத்த கடம்பூர் ராஜூ :
திமுகவின் வளர்ச்சிக்கு பாஜகவே காரணம், திமுகவிற்கு அதிகாரம் கொடுத்த கட்சியும் பாஜகதான். அந்த பாஜக கட்சியை தான் திமுக இன்று தீண்டத் தகாத கட்சியாக பார்க்கிறது” இவ்வாறு கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்தார்.
====