
நல்லாட்சி என்பது வெறும் வாக்குறுதி தான் :
Edappadi Palanisamy on Local Body : இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில், எங்கு நீதி மறைந்து நிழல் ஆட்சி செய்யுமோ, அங்கு நல்லாட்சி என்பது வெறும் வாக்குறுதியே! என்ற தத்துவம் தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய நிலையை துல்லியமாக வெளிப்படுத்துகிறது.
'உள்ளாட்சியில் நல்லாட்சி' என்று விளம்பரப்படுத்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்கள், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தால் சீரழிந்து, மக்களின் நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.
சொத்து வரி விதிப்பில் ஊழல் :
சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியில், சொத்து வரி விதிப்பதில்(Property Tax Scam) மிகப் பெரிய ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், முன்னாள் உதவி கமிஷனர், மண்டலத் தலைவரின் உதவியாளர் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விஞ்ஞான ஊழலில் திமுக அரசு :
விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷனாலேயே குறிப்பிடப்பட்ட திமுகவினர் வசம் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், அக்கட்சியை சேர்ந்த மேயர் மற்றும் தலைவர்களாக உள்ளவர்களை எதிர்த்து, எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.
அவர்களோடு சேர்ந்து திமுகவின் கவுன்சிலர்கள்(DMK Councillors) மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்களே ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவதும், உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்துவதும் எனச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
குடும்ப ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் :
குடும்ப ஆதிக்கத்திற்கு அல்ல என்பதை தமிழக மக்கள் 2026 சட்டசபை தேர்தலில்(TN Assembly Election 2026) ஸ்டாலினுக்கு உணர்த்தத் தயாராகி விட்டார்கள் என்பதை, நான் செல்லும் இடங்களில் எல்லாம் கூடும் மக்கள் கூட்டம் எடுத்துரைக்கிறது. 2026ல், அதிமுக ஆட்சி அமையும் போது, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் உறுதியளித்துள்ளார்.
-=====