"பட்ஜெட் இல்ல காதுகுத்து விழா": அழைப்பிதழுடன் சம்பவம் செய்த அதிமுக

ADMK Leaders Criticized TN Interim Budget 2026-2027 : இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது சட்டமன்றத்திற்கு காது குத்து அழைப்பிதழுடன் வந்த அதிமுக தலைவர்கள்.
ADMK leaders arrived at the Assembly with a surprise  kathukuthu invitation while the interim budget 2026 2027
ADMK leaders arrived at the Assembly with a surprise kathukuthu invitation while the interim budget 2026 2027Source : ADMK IT Wing
1 min read

காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்த அதிமுகவினர்

ADMK Leaders Criticized TN Interim Budget 2026-2027 : தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய பட உள்ள நிலையில் , இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடருக்கு ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வருகை தந்து பேரவையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர் அதிமுக உறுப்பினர்கள்.

காதுகுத்து அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளவை

கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

நாள்: பிப்ரவரி 17, 2026, இடம்: தமிழக சட்டமன்றம், நேரம்: காலை 10 மணி முதல். இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முன்னின்று காது குத்துவார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : இடைக்கால பட்ஜெட் 2026 : கனவு இல்லம் கூடுதலாக 1 லட்சம் வீடுகள்

மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை

விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று பட்ஜெட் தாக்கல் குறித்து மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் என்று அழைப்பிதழை பேரவைக்குள் ஏந்தி வந்தனர்

அழைப்பிதழை கையில் ஏந்தி வந்த அதிமுகவினர்

சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் 'மொய்' வைக்கலாம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ள அழைப்பிதழை அதிமுகவினர் கையில் ஏந்தி வந்தனர் ,

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in