

'Anti-Corruption Special Wing' in Chennai Police: Dedicated number to lodge complaints if a bribe is demanded!
ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு தொடக்கம்
சென்னை காவல் துறையில் முதன்முறையாக 'ஊழல் ஒழிப்புத் தனிப்பிரிவு' தொடங்கப்பட்டுள்ளது. சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இப்பிரிவை கமிஷ்னர் அமல்ராஜ் நேற்று ( 12-08-2026) தொடங்கி வைத்தார்.
புகார் அளிக்க பிரத்யேக மொபைல் எண்
சென்னை மாநகர காவல்துறையினர் லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக 78717 23000 என்ற பிரத்யேக மொபைல் போன் எண் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையினருக்கு கமிஷ்னர் கடும் எச்சரிக்கை
காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் லஞ்சம் பெற்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கமிஷ்னர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார். மேலும் விசாரணையில் காவல்துறையினர் லஞ்சம் பெற்றது உறுதியானால் கைது நடவடிக்கை பாயும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் எஸ்.பி தலைமையில் தனிக்குழு
புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஊழல் ஒழிப்புப் பிரிவுக்கு, கூடுதல் எஸ்.பி குமரேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப கூடுதலாக காவலர்களும் இதில் நியமிக்கப்படுவர்.
பிற மாவட்டங்களுக்கும் விரிவாக்க திட்டம்
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தவெக அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பிற மாவட்டங்களிலும் விரைவில் ஊழல் ஒழிப்புப் பிரிவு
சென்னை மாநகரில் இந்த புதிய பிரிவின் செயல்பாட்டைப் பொறுத்து, மற்ற மாவட்டங்களிலும் படிப்படியாக ஊழல் ஒழிப்பு பிரிவு தொடங்கப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவிதுள்ளனர்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானம் : பேரவையில் கொண்டு வந்த முதல்வர் : 543 தொகுதிகள் படியே 2029 தேர்தல்...
=======