

Bills to be introduced in the Legislative Assembly today: High anticipation for Chief Minister Vijay's reply!
தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் கடந்த 18 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரை
கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
அதற்கான பதிலுரையை இன்று (செப்டம்பர் 7) முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் வழங்கவுள்ளார்.
முதல்வரின் பதிலுரை இடம்பெறவுள்ளதால் இன்றைய பேரவைக் கூட்டத்தொடர் மீது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதிய திருத்த மசோதாக்கள் அறிமுகம்
சட்டப்பேரவை காலை 9.30 மணிக்குக் கூடியதும் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் சட்டத் திருத்த மசோதாவை முதல்வர் விஜய் அறிமுகம் செய்கிறார்.
தொடர்ந்து, 2026 தமிழ்நாடு ஊராட்சிகள் 2-ஆம் திருத்த மசோதாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்தும், 2026 தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரி திருத்த மசோதாவை வணிகவரித் துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வனும் அறிமுகம் செய்யவுள்ளனர்.
இன்றைய விவாதம் குறித்த பேரவைத் தலைவர் அறிவிப்பு
காவல் மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை குறித்த முதல்வர் விஜய்யின் பதிலுரைக்குப் பிறகு, இன்றைய பேரவையில் விவாதம் எதுவும் இருக்காது என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆசிரியர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘Tr’ என பயன்படுத்தலாம்: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு!
=====