
காவல்துறையினர் உள்நோக்கம் :
Annamalai on DMK Government : தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சில நாட்களுக்கு முன்பாக, குடல் இறக்கம் அறுவைச் சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதினத்தை, இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று, விசாரணை என்ற பெயரில் சுமார் ஒரு மணி நேரம் துன்புறுத்தி விட்டு, தற்போது விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று திமுக அரசின் காவல்துறை கூறுவதில் உள்நோக்கம் உள்ளது.
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு :
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. பத்து வயது குழந்தை மீது பாலியல் தாக்குதல் நடத்தியவனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கிட்னி திருடும் திமுக கும்பலை(Kidney Trafficking) விசாரிக்க நேரமில்லை. காவல்துறையினருக்கே திமுகவினரால் பாதுகாப்பில்லாத நிலை.
மேலும் படிக்க : முருகபக்தர் மாநாடு பேச்சு : சிரவை ஆதினம் மீது வழக்குப்பதிவு
நாடகமாடும் திமுக அரசு :
ஆனால், உப்பு சப்பில்லாத காரணங்களைக் கூறி, மதச்சார்பின்மை என்ற பெயரில் யாரையோ திருப்திப்படுத்த, நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதினத்தை(Madurai Aadheenam) தொடர்ந்து துன்புறுத்தும் போக்கை, திமுக அரசின் காவல்துறை கைவிட வேண்டும்.
நடவடிக்கையை திரும்ப பெறுக :
உடனடியாக, அவரது முன்ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுவைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அண்ணாமலை(Annamalai Condemns DMK Govt) குறிப்பிட்டுள்ளார்.
======