"அரசியலில் யாரும் நிரந்தர எதிரி இல்லை" : அண்ணாமலை நம்பிக்கை

Annamalai Meet TTV Dhinakaran : தேர்தல் களம் என்று வரும் கூட்டணி கணக்கு எல்லாம் மாறும் என்று அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.
Annamalai Meet TTV Dhinakaran
Annamalai Meet TTV Dhinakaran
1 min read

டிடிவியுடன் அண்ணாமலை சந்திப்பு :

Annamalai Meet TTV Dhinakaran : அதிமுகவில் இருந்து விலகிய டிடிவி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார். சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் மீண்டும் இணைய எடுத்த முயற்சிகள் எதுவும் இன்று வரை கைகூடவில்லை. இந்தநிலையில், டிடிவி தினகரனை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

அரசியலில் நிரந்தர எதிரியே கிடையாது :

இந்தசந்திப்பு குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை(Annamalai Press Meet), அரசியல் நிலவரம் குறித்து தினகரனிடம் பேசினேன். மீண்டும் கூட்டணியில் இணைய வலியுறுத்தினேன். கோரிக்கை ஏற்பதும், ஏற்காததும் அவரது விருப்பம். அரசியலில் நிரந்தர எதிரி இல்லை. தினகரனை சந்தித்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய(NDA Alliance in Tamil Nadu) வலியுறுத்தினேன். இன்னும் காலம் இருக்கிறது. காத்திருப்போம். சின்ன சின்ன மனஸ்தாபங்கள் எல்லாமே கடைசியாக தேர்தல் களத்தின் சூடு வரும் போது அது மாறும் என்பது என்னுடைய நம்பிக்கை. ஓபிஎஸ் அவர்களையும் விரைவில் சந்தித்து பேச இருக்கிறேன்.

விஜயின் கருத்தை வரவேற்கிறேன் :

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விஜயின் கருத்தை வரவேற்கிறேன்(Annamalai on TVK Vijay). தமிழகத்தில் யாராவது குரல் கொடுக்க ஆரம்பித்தால் பாஜகவின் பி டீம் என கூறுகிறார்கள். கையெழுத்தான ஒப்பந்தங்கள் எத்தனை? இந்தப்பயணம் தொடர்பாக தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

உண்மையை மறைக்கும் திமுக அரசு :

தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் 2 நிறுவனங்களும், மத்திய அரசு நிறுவனங்கள். மத்திய அரசு நிறுவனங்கள் தான் முதலீடு செய்கிறது என்று சொல்வதில், திமுக அரசுக்கும், தொழில் துறை அமைச்சருக்கும் என்ன தயக்கம்? மத்திய அரசின் நிறுவனத்தை மறைத்து தனியார் நிறுவனம் என்று எத்தனை மறைத்து வண்டி ஓட்ட முடியும். சபாநாயகர் அப்பாவு அரசியல் செய்து வருகிறார். நாட்டில் அரசியல் செய்வதில் அப்பாவுக்கு முதலிடம்.

மேலும் படிக்க : மதுரை திமுக புள்ளியின் ”கமிஷன் அடாவடி” : அம்பலப்படுத்திய அண்ணாமலை

ரஜினியுடன் வழக்கமாக சந்திப்பு :

நான் ரஜினியை அடிக்கடி சந்திப்பேன். அவர் ஆன்மிகம் குறித்துப் பேசுவார். சில அறிவுரைகள் கூறுவார்(Annamalai on Rajinikanth). அவரை குருவாகப் பார்க்கிறேன். வெளிப்படையாக எனது கருத்துகளைப் பேசி வருகிறேன். யாரையும் ஒளிந்து சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ரஜினியை அடிக்கடி போய் சந்திப்பது நட்பு அடிப்படையில் தான்” இவ்வாறு அண்ணாமலை பேட்டியளித்தார்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in