
BJP Annamalai Criticized TVK Vijay Campaign : வாரம் தோறும் சனிக்கிழமை மக்களை சந்திக்க போவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்து இருக்கிறார். அதன்படி, வரும் 13ம் தேதி திருச்சியில் மக்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கூட்டணியில் வருத்தம் இருக்கிறது :
இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை(Annamalai Press Meet), “தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருக்கின்றன. அவை விரைவில் முடிவுக்கு வரும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டிடிவி.தினகரன், ஓபிஎஸ் மீண்டும் வர வேண்டும், கூட்டணியில் தொடர வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். வருத்தத்தில் ஒரு முடிவை எடுத்திருப்பார்கள்.
தலைவர்களை மதிக்கும் கட்சி பாஜக :
நாம் எப்போதுமே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை கடவுளாக(Muthuramalinga Thevar) கருதி வருகிறோம். அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கிறோம். தியாகி இமானுவேல் சேகரன் விழாவுக்கும் ஆண்டுதோறும் பாஜக தலைவர்கள் செல்கின்றனர். எங்களைப் பொறுத்தவரை, எதையும் சர்ச்சையாக பார்ப்பதில்லை. எல்லோரும் அவரவர் கருத்தை சொல்கிறார்கள்.
நயினார் தான் எங்கள் தலைவர் :
தமிழகத்தில் பாஜகவை வழி நடத்தும் நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran) தான் எங்ளது தலைவர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் ஏன் அவசரப்பட வேண்டும்?
24 மணி நேர அரசியலுக்கு வாங்க :
மதுரை மாநாட்டை நடத்திய விஜய்(Annamalai Criticized TVK Vijay), 24 மணி நேரமும் அரசியல் களத்தில் இருக்க வேண்டும். தவெக தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சி என்று அவர்கள் சொல்கின்றனர். சனிக்கிழமை மட்டும் நான் பிரசாரத்துக்கு வருவேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மக்களைப் பார்ப்பேன். பிற நாட்களில் பார்க்க மாட்டேன் என்பது புதிதாக வந்திருக்கும் அரசியல் கட்சிக்கு அழகல்ல. திமுகவுக்கு தவெகதான் எதிரி என்கின்றனர். இதை களத்தில் காட்ட வேண்டும்.
மேலும் படிக்க : சனிக்கிழமைதோறும் மக்கள் சந்திப்பு: விஜய் சுற்றுப்பயணம் முழு விபரம்
தமிழகத்தில் மாற்றம் நிச்சயம் :
தமிழகத்தில் அதிமுக(ADMK Campaign) ஒரு யாத்திரை நடத்தி வருகிறது. பாஜக பூத் கமிட்டி கூட்டங்களை முடித்து, மண்டல மாநாடுகளை நடத்தவிருக்கிறது. ஜான் பாண்டியன் அண்மையில் திண்டுக்கல்லில் மாநாடு நடத்தினார். இனி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கட்சித் தொண்டர்களை தாண்டி, மக்கள் ஆர்வமாக பங்கேற்கும்போதுதான் அரசியல் மாற்றத்துக்கான அறிகுறி தெரியும்” இவ்வாறு அண்ணாமலை(Annamalai Speech) பேட்டியளித்தார்.
================