
தமிழக சட்டமன்ற தேர்தல் :
BJP Leader H Raja Speech About DMK Govt : அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் வரிந்து கட்டி வேலை பார்க்க தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் மறைமுகமாக நடைபெற்று வருகின்றன. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாஜக, இந்த முறை கணிசமாக இடங்களை கைப்பற்றும் முனைப்படும் களமிறங்கி இருக்கிறது.
திமுகவிற்கு பயம் வந்துவிட்டது :
இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா(H Raja Press Meet), அதிமுக - பாஜக கூட்டணி அமைந்த பிறகு, திமுகவில் பதற்றம் வந்து விட்டது. எடப்பாடி பழனிசாமியின் யாத்திரைக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. பாஜக தொண்டர்களும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
மேலும் படிக்க : ஏழைகளை அடிக்கிறீர்கள் ; அம்பானி மீதும் கை வைப்பீர்களா?: பாஜக
பாமக யார் பக்கம்? - எச். ராஜா :
பாட்டாளி மக்கள் கட்சி(PMK) மட்டும் யார் பக்கம் என்ற முடிவு எடுக்காமல் உள்ளது. கட்சிகளின் எண்ணிக்கை மட்டும் வெற்றியை முடிவு செய்யாது. இந்திராவுக்கு எதிராக 1971ல் சோசியலிஸ்ட், ஸ்தாபன காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஆனால் அவரை தோற்கடிக்க முடியவில்லை. அதே கூட்டணி கட்சிகள் இணைந்து 1977ல் ஜனதா கட்சி பெயரில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. மக்கள் மனமாற்றத்தால் காங்கிரஸை தோற்கடிக்க முடிந்தது.
திமுக வீட்டிற்கு அனுப்பப்படும் :
அதுபோல இன்றைக்கு திமுக அரசை(DMK Govt) நீக்க மக்கள் முடிவு செய்து விட்டனர். எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும், சேராவிட்டாலும் எங்கள் கூட்டணி வெற்றி உறுதியாகி விட்டது. இந்து விரோத அரசை நீக்க மக்கள் முடிவு செய்து இருப்பதால்தான், மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு(Madurai Muruga Pakthargal Manadu) வெற்றி அடைந்தது. திமுக முருகனை கையில் எடுத்தது எங்களுக்கு கிடைத்த வெற்றி, இவ்வாறு எச். ராஜா(H Raja) தெரிவித்தார்.
=====