’கரூர் சம்பவம்’ சட்டமன்றத்தில் எதிரொலிக்கும் : வானதி சீனிவாசன்

BJP MLA Vanathi Srinivasan on Karur Stampede Death Incident : கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
BJP MLA Vanathi Srinivasan said we will raise question in TN Assembly Session 2025 regarding Karur Stampede Death Issue
BJP MLA Vanathi Srinivasan said we will raise question in TN Assembly Session 2025 regarding Karur Stampede Death Issue
1 min read

தமிழக சட்டமன்ற கூட்டம் :

BJP MLA Vanathi Srinivasan on Karur Stampede Death Incident : தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ;நான்கு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில், கரூர் துயரம் தொடர்பாக இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான திமுக

இந்தநிலையில், கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். “கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமான வாழ்வை அமைக்க தாய்மை திட்டத்தை துவக்கி உள்ளோம். திராவிட மாடல் ஆட்சி சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை என பேசுகின்ற ஆட்சியில் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் மட்டுமல்லாது, பெண்களுக்கு மத்திய அரசு மூலம் கிடைக்கும் திட்டங்களை கூட சேர விடாமல் செய்கின்றனர்.

கரூர் சம்பவத்திற்கு நீதி வேண்டும்

தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்து விட்டு அதற்காக போராடுபவர்களை அடக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். கரூர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு, நியாயம் வேண்டும் என நினைக்கிறோம். அதனை அரசியல் என நினைத்தால் நினைத்துக் கொள்ளுங்கள். கூட்டணி அமையும் போது சிலர் சில கருத்தை சொல்லத்தான் செய்வார்கள்.

எடப்பாடியும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்

அதிமுக பொதுச் செயலலர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் துவங்கிய பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு, “அவருக்கும் பரப்புரை உள்ளது. அவர் வரவில்லை என்றாலும், எதிர்கட்சி சட்டமன்ற துணைத் தலைவர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆகியோர் கலந்து கோண்டு உள்ளனர்.

மேலும் படிக்க : "CBI கையில்" கரூர் வழக்கு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு

கரூர் சம்பவம் - சட்டமன்றத்தில் பேசுவோம்

கரூர் துயரச் சம்பவம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் தரப்பில் கேள்வி எழுப்பப்படும். வரும் 28ம் தேதி கோவையில் குடியரசு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது” இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in