
மாநில கல்விக் கொள்கை :
TN BJP Criticized State Education Policy : தமிழக அரசு சார்பில் நேற்று மாநில கல்விக் கொள்கை வெளியிட்டப்பட்டது. இதில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து(11th Board Exam) உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த கல்விக் கொள்கை பற்றி மாறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனர்.
மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் :
அதன்படி, மத்திய அமைச்சர் எல். முருகன்(L Murugan) வெளியிட்ட அறிக்கையில், “ தமிழில் புதிது புதிதாக பெயர் வைத்து, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி காலத்தை ஓட்டி வரும் திமுக அரசின் அடுத்த வெளியீடாகவே மாநில கல்விக் கொள்கை(State Education Policy 2025) இருக்கிறது. ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டு, இவர்கள் தமிழில் வெளியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கையே புரியவில்லை.
திமுகவின் சமூக நீதி எங்கே? :
இருமொழிக் கொள்கை செயல்படுத்தப்படும் என்றால் தனியார் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை(National Education Policy) கூறியபடி மூன்றாவது மொழி இருப்பதை திமுக அரசு ஏற்றுக் கொள்கிறதா, இதற்கு பெயர் தான் திமுகவின் சமூக நீதியா, தாய்மொழி வழிக்கல்வியைத் தானே தேசிய கல்விக் கொள்கையும் வலியுறுத்துகிறது.
தரமில்லாத அரசுப் பள்ளிகள் :
தமிழகப் பள்ளி மாணவர்கள் எண்களை அடையாளம் காணக்கூட சிரமப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறதே, அரசு பள்ளிகளில் தரமில்லை எனக்கூறி, கூலித் தொழிலாளி கூட தனது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது ஏன், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதியை வழங்கிய பிறகும், தமிழக அரசு அதைச் செலுத்தாத காரணத்தால் தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோரை நிர்பந்திப்பதாக செய்திகள் வந்துள்ளன. இந்த கேள்விகளுக்கு முதல்வர் பதிலளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
மாணவர்களை ஏமாற்றும் திமுக அரசு :
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran) விடுத்துள்ள அறிக்கையில், “ தேசிய கல்விக் கொள்கையை வெட்டி வீராப்புக்காக எதிர்த்துவிட்டு, பின் மாணவர் நலனில் அக்கறை கொண்டது போல மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதாக மக்களின் வரிப்பணத்தை வீணடித்து மாணவர்களை திமுக அரசு ஏமாற்றியுள்ளது.
மேலும் படிக்க : மாநில கல்விக்கொள்கை வெளியீடு 2025: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
தேசிய கல்விக் கொள்கையின் பிரதி :
மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவை பார்த்து பயந்து, அவசரகதியில் தேசிய கல்விக் கொள்கையை பிரதி எடுத்து மாநில கல்விக் கொள்கையாக திமுக அரசு வெளியிட்டிருக்கிறது. அதேநேரம், தேசிய கல்விக் கொள்கையின் பல முக்கிய அம்சங்களை இடம்பெறச் செய்யாதது காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது” என விமர்சித்துள்ளார்.
===============