
அமைச்சரின் சர்ச்சை பேச்சு :
Nainar Nagendran on KKSSR Ramachandran : விருதுநகர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்து இருந்தார்.
பெண்களை ஏளனமாக பேசலாமா? :
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran), “திட்டங்களைத் தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. அரசின் மகளிர் உரிமைத் தொகை(Magalir Urimai Thogai 1000) குறித்து கேள்வியெழுப்பிய பெண்களிடம் 'மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம்' என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்(Sattur Ramachandran) பேசியது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற செயல்.
அமைச்சருக்கு கேலி, கிண்டல் தேவையில்லை :
தனது அரசுப் பதவியின் மாண்பினை மறந்துவிட்டு இதுபோன்ற கேலி, கிண்டல்களில் ஒரு அமைச்சர் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது. “ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை” எனக் கூறிய திமுக , அரியணையில் அமர்ந்ததும் “தகுதியானவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை” எனப் பாதிப் பெண்களைப் பட்டியலில் இருந்து நீக்கியது.
நகை அணிந்தால் உரிமைத் தொகை கிடையாதா? :
தற்போது “நகை அணிபவர்களுக்கு பணம் கிடையாது” எனக் கூறி மீதி பெண்களையும் விரட்டப் பார்க்கிறது. திமுக அரசிடம் மகளிர் உரிமைத் தொகை(Magalir Urimai Thogai) வாங்க வேண்டுமென்றால் பெண்கள் தங்களிடமிருக்கும் ஆபரணங்களைக் கூட அணியக் கூடாதா? எப்பேற்பட்ட மேட்டிமைத்தனமான எண்ணமிது?
திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சு :
பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும்(Free Bus Scheme) பெண்களை “ஓசி” எனவும், மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களை “ரூ.1000ல் கிரீம், பவுடர்லாம் வாங்கி பளபளன்னு இருக்கீங்க” எனவும், உரிமைத் தொகை வரவில்லை என முறையிடும் பெண்களை “மெண்டல்கள்” எனவும் நாக்கில் நரம்பின்றி வசைபாடும் திமுகவினர், நகைச்சுவை என்ற பெயரில் தொடர்ந்து பெண்களை மட்டம் தட்டுவதையும், உருவக்கேலி செய்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?.
மேலும் படிக்க : தோல்வி பயத்தால் ‘தாயுமானவர் திட்டம்’ : திமுகவை வெளுத்த நயினார்
தமிழக மக்களிடம் மன்னிப்பு கேளுங்க :
எனவே, திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்(Minister Sattur Ramachandran) தனிப்பட்ட முறையில் தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, இனியும் இதுபோன்ற விமர்சனங்களைத் திமுக தலைவர்கள் தவிர்ப்பதையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.