
Nainar Nagendran Slams DMK Government : மூத்த குடிமக்களுக்கு வீடு தேடி சென்று, ரேஷன் பொருட்களை வழங்கும் ‘ ’தாயுமானவர் திட்டம்’ தமிழக அரசு தொடங்கி உள்ளது. இது இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது.
காற்றில் பறந்த தேர்தல் வாக்குறுதிகள் :
இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தேர்தல் வாக்குறுதிகளில் எவற்றை எல்லாம் திமுக அரசு நிறைவேற்றி இருக்கிறது என கேள்வி எழுப்பினார். மகளிருக்கு ஆயிரம்(Magalir Urimai Thogai) ரூபாய் தருவோர் என்றார்கள். 2021ல் அறிவித்து விட்டு 2024ல் தான் இந்தத் திட்டத்தை செயல்படுத்தினார்கள்.
இப்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை சொந்த கட்சிக்காக திமுகவுக்காக வேலை வாங்குகிறார்கள். மூத்த அதிகாரிகளை கட்சி வேலைக்கு அனுப்புவதை பார்க்கும் போது எனக்கே ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
பேச்சளவில் மட்டுமே தாய்மொழிக் கல்வி :
தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று எல்லாம் பேசுகின்றனர். இன்றைக்கு 207 பள்ளிகளை மூடி இருக்கின்றனர். நியமனம் செய்யப்பட வேண்டிய ஆசிரியர்களே பள்ளிகளில் கிடையாது. அதனால் தான் பள்ளிகள் குழந்தைகள் சேருவதே இன்று குறைந்திருக்கிறது.
அண்மையில் தேசிய அளவில் வந்த அறிக்கையில், தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் பின்னோக்கி போய் கொண்டிருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அங்கு பாஜகவினர் யாரும் இல்லை.
தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் :
ஆணவப் படுகொலை மட்டுமே தமிழகத்தில் நடக்கிறது. நாள் ஒன்றுக்கு நான்கு, ஐந்து படுகொலைகளாவது மாவட்டங்களில் இல்லாமல் இல்லை. அதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாகி விட்டது. எல்லா இடங்களிலும் கஞ்சா. இன்றைக்கு விமான நிலையத்தில் 7 கோடி ரூபாய்க்கு கஞ்சாவை பிடித்துள்ளனர்.
மேலும் படிக்க : BJP vs DMK: அவசர கதியில் மாநில கல்விக் கொள்கை : தமிழக பாஜக கருத்து
நான்கு ஆண்டுக்கு பின் திட்டங்கள் :
ஆட்சிக்கு வந்து இத்தனை வருடம் ஆகிவிட்டது. இப்போது தாயுமானவர் திட்டத்தை(Thayumanavar Scheme) தொடங்க வேண்டிய அவசியம் என்ன? இதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாமே? இன்றைக்கு திமுகவினர் தோல்வி பயத்தில் இருக்கின்றனர். அதனால் தான் எல்லா திட்டங்களையும் கொண்டு வரப் பார்க்கிறார்கள். தோல்வி பயமே திட்டங்கள் அறிவிப்புக்கு காரணம்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
=========