விவசாயிகள் வயிற்றில் அடிப்பது நல்லாட்சியா?: திமுக அரசுக்கு கேள்வி

Nainar Nagendran slams DMK Government : விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திமுகவினருக்கு நாடு போற்றும் நல்லாட்சி போல் இருப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்து உள்ளார்.
BJP President Nainar Nagendran slams DMK Government on Farmers Issue
BJP President Nainar Nagendran slams DMK Government on Farmers Issue
1 min read

மழையால் நெல் மூட்டைகள் சேதம் :

Nainar Nagendran slams DMK Government : தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த 50,000 அதிகமான நெல் மூட்டைகளை மழையால் சேதமடைந்து இருக்கின்றன.

இதை சுட்டிக்காட்டி தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், ” தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைத்திருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையினால் சேதமாகியுள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது.

விவசாயிகளை அலட்சியபடுத்திய திமுக அரசு :

2024-25ம் ஆண்டு பட்ஜெட்டில் உணவு சேமிப்புக் கிடங்குகளுக்கான நிதி ஒதுக்கீட்டை கடந்த ஆண்டைக் காட்டிலும் 50% குறைத்து விவசாயிகள் நலனை அலட்சியப்படுத்தியது திமுக அரசு(DMK Govt). அத்தோடு மட்டுமின்றி, தற்காலிக கொள்முதல் நிலையங்களில் எந்தவித பாதுகாப்புமின்றி மழையில் நனையவிட்டு வீணாக்கி உழவர்களின் உழைப்பை அவமதித்துள்ளது.

மேலும் படிக்க : கழிவறை பராமரிப்புக்கு 1,000 கோடி! ஆனால் தரம்? : நயினார் நாகேந்திரன் காட்டம்

நாடு போற்றும் நல்லாட்சியா இது? :

இப்படி தொடர்ந்து உழவர் நலனைக் கைகழுவி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது தான் திமுகவினருக்கு நாடு போற்றும் நல்லாட்சி போலும். 'நானும் டெல்டாக்காரன் தான்' என்று இனியொரு முறை பெருமிதம் கொள்ளும் முன், டெல்டா விவசாயிகளின் துயரங்களை ஒருமுறையாவது கண்டுகொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன், இவ்வாறு நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran) கேட்டுக் கொண்டுள்ளார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in