”முடிவோடு வந்திருக்கிறார், அட்வைஸ் தேவையில்லை” : பிரேமலதா கருத்து

Premalatha Vijayakanth on TVK Vijay : புதிதாக வருகிறவர்களுக்கு அட்வைஸ் அவசியமில்லை, ஒரு முடிவோடு தான் வருகிறார்கள் என்று, பிரேமலதா தெரிவித்து இருக்கிறார்.
Premalatha Vijayakanth on TVK Vijay
Premalatha Vijayakanth on TVK Vijay
1 min read

விஜயகாந்த் பிறந்தநாள் விழா :

Premalatha Vijayakanth on TVK Vijay : தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தொண்டர்கள் மத்தியில் பிறந்தநாள் கேக்கை வெட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், விஜயகாந்த் மகன்கள் தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த் வழியில் தேமுதிக :

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா, “ தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாள்(Vijayakanth Birthday) வறுமை ஒழிப்பு தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. விஜயகாந்த் வழித்தடத்தை நாங்கள் அப்படியே பின்பற்றுகிறோம். அவரின் காலடி தடங்களை தேமுதிகவினர் அனைவரும் பின் தொடருகிறோம்.

ரியல் எம்ஜிஆர் கேப்டன் தான்:

எனது சுற்றுப் பயணம் பெரிய எழுச்சியை உருவாக்கி இருக்கிறது. ரியல் எம்ஜிஆராக வாழ்ந்தவர் கேப்டன்(Captain Vijayakanth). அதனால் தான் மக்களே அவரை கறுப்பு எம்ஜிஆர் என்று அழைத்தார்கள். தனது மானசீக குருவாக எம்ஜிஆரை திரையுலகிலும் சரி, அரசியலில் உள்பட எல்லா இடத்திலும் முன்னிலைப்படுத்தினார்.

மேலும் படிக்க : 'கேப்டன் பிரபாகரன்' Rerelease: கண்ணீர் சிந்திய பிரேமலதா விஜயகாந்த்

விஜய்க்கு அட்வைஸ் தேவையில்லை :

மற்றவர்கள் எம்ஜிஆரை பற்றி சொல்றாங்க என்றால், ஏன் சொல்றாங்க என்று நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும். வருகிறவர்களுக்கு அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. ஒரு முடிவு பண்ணி தான் வர்றாங்க. நான் தலைகுனிந்தாலும் எனது தொண்டன் தலை குனிய வைக்க மாட்டேன் என்று விஜயகாந்த் எப்போதும் சொல்வார்” இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த்(Premalatha Vijayakanth) தெரிவித்தார்.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in