மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு NO? : மத்திய அரசு விளக்கம்

Madurai, Coimbatore Metro Rail Project Proposal : மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்ட பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கு என்ன காரணம் என்பதை மத்திய அரசு விளக்கியுள்ளது.
Central government explained the reason for returning the Madurai, Coimbatore Metro Rail project proposal
Central government explained the reason for returning the Madurai, Coimbatore Metro Rail project proposalGoogle
2 min read

மெட்ரோ ரயில் - மக்கள் வரவேற்பு

Madurai, Coimbatore Metro Rail Project Proposal : உலகளவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளும் பெருகி வருகின்றன. அந்த வகையில் பெருநகரங்களில் மெட்ரோ ரயில், மின்சார ரயில் போக்குவரத்து மக்களின் பயணத்தை எளிதாக்குகின்றன. வாகன நெரிசல் மிக்க சாலைகளில் பயணத்தி நேரத்தை பறிகொடுப்பதை விட, திட்டமிட்டு பயணிக்க ரயில் போக்குவரத்து வசதியாக இருக்கிறது.

சென்னை மெட்ரோ ரயில்

அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அரசு பேருந்து, மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குளிர்சாதன வசதி கொண்ட மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

கோவை, மதுரை - மெட்ரோ ரயில்

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது போல கோவை மற்றும் மதுரையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக பல கட்ட சோதனைகள் நடத்தப்பட்டது. மண் பரிசோதனைகள், ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ள இடங்கள், வழித்தடம் என ஆய்விற்கு பிறகு மத்திய அரசுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பாக கோரிக்கை மனு, தமிழக அரசு சார்பில் சமர்பிக்கப்பட்டது.

மெட்ரோ ரயிலுக்கு நோ!

இந்த நிலையில் மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியானதால், அதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனத்தை தெரிவித்தன.

காரணத்தை விளக்கும் மத்திய அரசு

இந்த நிலையில் தமிழக அரசுக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழக அரசின் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் தவறுகள் இருக்கும் காரணத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு கேள்வி?

சென்னையை விட கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என தமிழக அரசின் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, சென்னையை விட குறைந்த தொலைவில் கோவையில் மெட்ரோ அமைக்கப்படும் நிலையில் எப்படி அதிகம் பேர் பயன்படுத்துவர்?.

கோவை திட்டம் - ஈர்க்கும்படி இல்லை

தமிழக அரசு பரிந்துரைத்துள்ள சராசரி பயண நேரம் மற்றும் வேகம் மக்களை கோவை மெட்ரோ ரயிலுக்கு ஈர்க்கும் வகையில் இல்லை, மக்களை தங்களின் வழக்கமான போக்குவரத்தில் இருந்து மெட்ரோவிற்கு மாற்றும் வகையில் தமிழக அரசின் பரிந்துரை இல்லை, கோவையில் தமிழக அரசு பரிந்துரைத்துள்ள 7 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு போதுமான இடவசதி தெரிவிக்கப்படவில்லை

மதுரை மெட்ரோ - உகந்ததாக இல்லை

அடுத்தாக மதுரை திட்ட அறிக்கையை பார்க்கும் போது மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கு உகந்ததாக தெரியவில்லை, கோவை புறநகர் மக்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதை திட்ட அறிக்கையில் சரியாக தமிழக அரசு நிரூபிக்கவில்லை,

திமுக அரசு மறந்து விட்டதா?

சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63,246 கோடியை ஒதுக்கியுள்ளதை முதல்வர் ஸ்டாலின் மறைத்துவிட்டார் என குற்றம்சாட்டியுள்ள மத்திய அமைச்சர் மனோகர்லால் கட்டார், இதுவரை யாருக்கும் வழங்காத வகையில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதாக தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான மெட்ரோ ரயில் விண்ணப்பத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆக்கி சர்ச்சையாக்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

====================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in