
தனியார் வசமான தூய்மை பணி :
Chennai Sanitation Workers Protest Day 12 : சென்னை மாநகராட்சியில் உள்ள ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த தூய்மை பணிகள் ஆகஸ்டு 1ம் தேதி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்த மண்டலங்களில் தூய்மை பணியாளர்களாக வேலை பார்க்கும் பணியாளர்கள், கடந்த 1ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
’மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ :
’மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ என இதற்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 12வது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில்,
ராயபுரம் மற்றும் திருவிக நகர் பகுதிகளின் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தண்டையார்பேட்டை, அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருவதாக தூய்மைப் பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நீதிமன்ற உத்தரவை மீறிய அரசு :
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக் குழுவினர், “10 மண்டலங்கள் 2020ம் ஆண்டே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. 2021 ஆம் ஆண்டு 7-வது மண்டலம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டபோது அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்க நீதிமன்றத்தில் தடை வாங்கியிருந்த பிறகும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அம்மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைப்பதிருப்பதே போராட்டத்திற்கான முக்கிய காரணம்.
காற்றில் பறந்த தேர்தல் வாக்குறுதி :
திமுக தனது தேர்தல் அறிக்கையில், ‘தூய்மை பணியாளர்களில் 10 வருடத்திற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யபடும்’ எனக்கு கூறி ஐந்தாண்டு ஆட்சியே முடிவடையும் தருவாயில் இன்னும் பணிநிரந்தரம் செயல்படுத்தவில்லை; எனவே தேர்தல் அறிக்கையில் திமுக கூறியதை நிறைவேற்ற வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க : Chennai Protest : சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தொடரும் போராட்டம் - பணியாளர்கள் உறுதி :
12வது நாளாக போராட்டம்(Chennai Corporation Workers Protest) நீடிக்கும் நிலை, பணி நிரந்தரம் மட்டுமே சரியான தீர்வு என்பதில் தூய்மை பணியாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அது நடக்காதவரை தங்கள் போராட்டம் தொடரும் என்பதில் அவர்கள் உறுதியுடன், ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.
====
.