
வந்தே பாரத் ரயில்கள் :
Vande Bharat Express Train Coach Update : குறிப்பிட்ட நேரத்தில் இயக்கம், சென்று சேருதல், பயணிகளுக்கு அதிக வசதி என 2019ம் ஆண்டு வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. குறித்த நேரத்தில் சென்று சேருவதால், இவற்றில் செல்ல பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே, நாட்டின் முக்கிய நகரங்களை, நீண்டதூர இடங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வந்தே பாரத், வழித்தடங்கள் :
மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல், செகந்திராபாத் - திருப்பதி, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி(Egmore To Tirunelveli Vande Bhrat Train), மதுரை - பெங்களூரு கன்டோன்ட்மென்ட், தியோகர் - வாரணாசி, ஹவுரா - ரூர்கேலா, இந்துார் - நாக்பூர் ஆகிய ஏழு வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பயணிகளிடம் அதிக வரவேற்பு :
எட்டு பெட்டிகளுடன் நான்கு வழித்தடங்களிலும், 16 பெட்டிகளுடன் மூன்று வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏழு வழித்தடங்களிலும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பதிவு செய்து மட்டுமே இதில் பயணிக்க முடியும் என்பதால், சீட் கிடைக்காத நிலைதான் இருக்கிறது.
வந்தே பாரத் கூடுதல் பெட்டிகள் :
எனவே, இந்த ஏழு வழித்தடங்களில் பெட்டிகளை அதிகரிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் மூன்று வந்தே பாரத் ரயில்களை(Additional Coach in Vande Bharat Express Train), 20 பெட்டிகளாக அதிகரித்தும், எட்டு பெட்டிகளுடன் கூடிய நான்கு ரயில்கள், 16 பெட்டிகளாகவும் அதிகரிக்கப்படும்.
மேலும் படிக்க : வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா 2025 : ”சிறப்பு ரயில்கள் இயக்கம்”
சென்னை - நெல்லையில் 20 பெட்டிகள் :
புதிய திட்டப்படி மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் , செகந்திரபாத் - திருப்பதி, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி(Chennai To Tirunelveli Vande Bharat Train Coach) ஆகிய மூன்று வழித்தடங்களில், 20 பெட்டிகள் அடங்கிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
மற்ற நான்கு வழித்தடங்களில், 16 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். இது மட்டுமின்றி தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்களை இயக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.
====================