
வேளாங்கண்ணி மாதா பேராலயம் :
Velankanni Church Festival Date 2025 : உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த விழாவில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
29ம் தேதி கொடியேற்றம் :
அதன்படி, ஆண்டுத் திருவிழா 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி(Velankanni Festival Flag Hoisting Date 2025), செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதை தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது.
வேளாங்கண்ணி சிறப்பு ரயில் :
அதாவது சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கும்(Chennai To Velankanni Special Trains), வேளாங்கண்ணியில் இருந்து தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் செப்டம்பர் 11 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06037) மறுநாள் காலை 07:35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 29, செப்டம்பர் 5 மற்றும் செப்டம்பர் 12 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06038) மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில் :
இதேபோல் திருவனந்தபுரத்தில்(Thiruvananthapuram To Velankanni) இருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் மாலை 3:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06115) மறுநாள் அதிகாலை 3:55 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மேலும் படிக்க : விநாயகர் சதுர்த்தி விழா 2025 : பிள்ளையார்பட்டியில் கொடியேற்றம்
எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில் :
எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், புனலூர், தென்காசி, விருதுநகர் வழியாக வேளாங்கணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 27, செப்டம்பர் 3 மற்றும் செப்டம்பர் 10ம் தேதிகளில் இரவு 11.20 மணிக்குபுறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06061) மறுநாள் காலை 10:15 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 மற்றும் செப்டம்பர் 11ம் தேதிகளில் மாலை 6.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06062) மறுநாள் காலை 11.55 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
====