சட்டப்பேரவைத் தேர்தல் : 26ம் தேதி சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் : ஆட்சியர்கள், SP-க்களுடன் ஆலோசனை

CEC Gyanesh Kumar on Tamil Nadu Assembly Election 2026 : தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், 26ம் தேதி சென்னை வருகிறார்.
CEC Gyanesh Kumar coming to Chennai Date on 26th, 27th to discuss preparations for TN Assembly elections 2026
CEC Gyanesh Kumar coming to Chennai Date on 26th, 27th to discuss preparations for TN Assembly elections 2026https://x.com/ECISVEEP
1 min read

அனல் பறக்கும் தேர்தல் களம்

Chief Election Commissioner Gyanesh Kumar is coming to Chennai on the 26th, 27th to discuss the preparations for the Tamil Nadu Assembly elections 2026 : தமிழக சட்டசபை தேர்தல் களம் நாளுக்குநாள் விறுவிறுப்படைந்து வருகிறது. நான்கு முனைப்போட்டி தான் இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அதிமுக கூட்டணியும், திமுக கூட்டணியும் இன்னும் எங்கும் சேராமல் இருக்கும் கட்சிகளை வளைக்கும் முயற்சியை தீவிரப்படுத்தி இருக்கின்றன.

யாருடன் கூட்டணி - நீடிக்கும் இழுபறி

பாமக ராமதாஸ், தேமுதிக எங்கு செல்வார்கள் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இதற்கு இடையில் ராஜய் சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழக்கத்தில் காலியாகும் தொகுதிகள் யாருக்கு என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

மேலும் படிக்க : ராஜ்யசபா சீட் : காலியாகும் 6 இடங்களுக்கு மார்ச் 16ல் தேர்தல் : அதிமுகவின் 2 இடம் யாருக்கு ?

சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர்

சட்டசபை தேர்தல் ஏப்ரலில் நடத்தப்படலாம் என்று கூறப்படுவதால், அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்தநிலையில்,

தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வரும் 26, 27ம் தேதி சென்னைக்கு வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்.

அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை

சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். கட்சிகள் முன்வைக்கும் யோசனைகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.

ஆட்சியர்கள், எஸ்பிக்களுடன் ஆலோசனை

மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் தேர்தல் ஏற்பாடுகளை பற்றி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை நடத்த உள்ளார்.

27ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாக்காளர்களுக்கு பயிற்சி

ஏற்கனவே,தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது மற்றும் வாக்கினை உறுதி செய்வது குறித்து செயல்முறை விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரே கட்டமாக தேர்தல்

தலைமை தேர்தல் ஆலோசனைக்கு பிறகு தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும். மார்ச்சில் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டு, ஏப்ரலில் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது.

தமிழகம், புதுச்சேரியில் ஒருகட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in