ICICI குறைந்தபட்ச இருப்பு தொகை 50,000 : வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ICIC Bank Minimum Balance 2025 Update : ஐசிஐசிஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்பு தொகை 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருப்பதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் அடைந்துள்ளனர்.
Customers are in shock minimum balance requirement at ICICI Bank increased to Rs 50,000.
Customers are in shock minimum balance requirement at ICICI Bank increased to Rs 50,000.
1 min read

ஐசிஐசிஐ வங்கி :

ICIC Bank Minimum Balance 2025 Update : இந்தியாவில் தேசிய வங்கிகளுக்கு இணையாக தனியார் வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் பெற்று பயனடைந்து வருகிறார்கள். ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் என்பது மும்பையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பன்னாட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனம், பல்வேறு துறைகளில் பெருநிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகளை வழங்கி வருகிறது.

சேமிப்பு கணக்கு - இருப்பு வரம்பு அதிகரிப்பு :

இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போருக்கான குறைந்தபட்ச இருப்பு வரம்பு திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐசிஐசிஐ வங்கியில் நகர்ப்புறங்களில் புதிதாக கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய்(ICICI Minimum Balance 50,000) வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 1ம் தேதி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

புதிய விதிமுறையின்படி, பெருநகர மற்றும் நகர்ப்புறங்களில் சேமிப்பு கணக்கு தொடங்குபவர்கள் இனி 10 ஆயிரம் ரூபாய்க்குப் பதிலாக 50 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லது மாதத்தில் ஒரு நாள் 15 லட்சம் ரூபாயை இருப்புத் தொகையாக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : 5.5% ஆக RBI நீடிப்பு

சிறுநகரங்கள் 25,000 இருப்பு தொகை :

சிறு நகரங்களுக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், கிராமப்புற பகுதிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயாகவும் குறைந்தபட்ச இருப்புத் தொகை(ICICI Bank Minimum Balance) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிதாக வங்கி கணக்கு தொடங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த நடவடிக்கை அந்த வகையில் புதிய கணக்கு தொடங்குவோர் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் எனத் தெரிகிறது.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in