
புதிய டிஜிபி வெங்கட்ராமன்? :
DGP Shankar Jiwal IPS As New Fire Commission Head : தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவால் பணியாற்றி வருகிறார். இவரது பதவிக் காலம் நாளை மறுநாள் ( ஆகஸ்டு 31 ) உடன் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த காவல்துறை இயக்குநர் யார்? என்ற கேள்வி எழுந்தது.
தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமனை, தமிழ்நாடு காவல் படை தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசு சார்பில் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும் வெங்கட்ராமன் தான் அடுத்த டிஜிபி என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஓய்வு பெறுகிறார் சங்கர் ஜிவால் :
டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால்(DGP Shankar Jiwal IPS Retirement) மற்றும் காவல்துறை வீட்டு வசதி நிறுவன டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் ஆகியோரின் பணிக்காலம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. எனவே, இருவருக்கும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று மாலை பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது.
தமிழக காவல் பணியில் சங்கர் ஜிவால் :
சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். பொறியாளரான இவர், 1990 ஆண்டு தமிழக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். மன்னார்குடி உதவி எஸ்பியாக பணியை தொடங்கிய அவர், சேலம், மதுரை எஸ்பியாகவும், பிறகு திருச்சி போலீஸ் கமிஷனராகவும் சிறப்பாக செயல்பட்டார்.
சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபி :
பின்னர் ஒன்றிய போதை பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குநர், உளவுப்பிரிவு ஐஜி, சிறப்பு அதிரடிப்படை ஏடிஜிபியாக பணியாற்றினர். அதைதொடர்ந்து 2021ம் ஆண்டு டிஜிபியாக பதவி உயர்வு பெற்ற அவர், சென்னை பெருநகர காவல்துறை கமிஷனராக பணியாற்றினர்.
அதன்பிறகு தமிழ்நாடு காவல்துறை படை தலைவராக கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.பணிக்காலத்தில் எந்த வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய டிஜிபியாக சங்கர் ஜிவால் ஓய்வு பெறுகிறார்.
மேலும் படிக்க : TN Police Jobs 2025: 2833 காவலர்கள் தேர்வு, இளைஞர்களுக்கு வாய்ப்பு
தீயணைப்பு ஆணைய தலைவராகிறார் ஜிவால் :
இந்தநிலையில், தீயணைப்பு ஆணையத் தலைவராக டிஜிபி சங்கர் ஜிவாலை நியமனம்(Fire Commission New Head Of DGP Shankar Jiwal) செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தீத்தடுப்பு முறைகளில் புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும், புதிய பயிற்சிகளை அளிக்கவும், புதிய தட்டங்களை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்ப சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
==============