
சீருடை பணியாளர் தேர்வாணையம் :
TN Police Recruitment 2025 Notification : தமிழ்நாட்டில் காவல்துறையில் உருவாகும் காலிப் பணியிடங்கள் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இரண்டாம் நிலை காவலர்கள், காவல் சார்பு ஆய்வாளர் பதவிகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு, உடற்தகுதி தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டுக்கான காலி பணியிடங்கள் வெளியிடப்படவில்லை.
2,833 காவலர்கள் தேர்வு :
இந்தநிலையில், 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு(TN Police Recruitment 2025 Notification) இருக்கிறது. இவர்கள் மட்டுமின்றி 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். மொத்தமாக 3,665 பேர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் :
காவலர் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் நாளை ( ஆகஸ்டு 22) முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்(TN Police Recruitment 2025 Application Online Date). குறைந்தபட்ச கல்வித்தகுது 10ம் வகுப்பு ஆகும். காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும். பின்னர் உடல் தகுதி தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.
ரூ.67,100 வரை ஊதியம் :
அனைத்து தேர்விலும் வெற்றி பெற்று காவலராக தேர்வு செய்யப்படுவோருக்கு மாத ஊதியமாக ரூ.18,200 முதல் 67,100 ரூபாய் வரை கிடைக்கும். தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு : டிகிரி இருந்தால் போதும்
மேலும் விவரங்களுக்கு TNUSRB இணையதளத்தைப்(Website) பார்க்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
=====