
யாருடன் கூட்டணி அமைக்கிறது தேமுதிக? :
Premalatha Vijayakanth Role Model Jayalalitha : மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த தேமுதிக, சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. அதிமுக, திமுகவை சம அளவில் பார்ப்பதாக கூறும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஜனவரி மாதம் கூட்டணி முடிவை அறிவிக்க போவதாக தெரிவித்து உள்ளார்.
புகைப்படம் வெளியிட்ட சுதிஷ் :
இந்தநிலையில் தேமுதிக பொருளாளரும், பிரேமலதாவின் சகோதரருமான எல் கே சுதீஷ்(LK Sudhish), தனது பேஸ்புக் பக்கத்தில், ஜெயலலிதாவும், பிரேமலதாவும் கையசைப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா தான் :
இதற்கு விளக்கம் அளித்துள்ள பிரேமலதா விஜயகாந்த், ”ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கருணாநிதி, ஒரு விஜயகாந்த் தான் எனத் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல ஒரு கட்சி பொதுச்செயலாளராக அரசியலில் சிங்க பெண்ணாக தனது சகோதரி இருக்கிறார் என்பதை குறிப்பிட்டே அவர் பதிவிட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்தார்.
பணி நிரந்தரம் செய்யுங்க :
தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அவர், கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இரும்பு பெண்மணி ஜெயலலிதா :
தமிழகத்தில் ஒருத்தருக்கு பதில் யாரும் வர முடியாது. ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி. முதல்வராக இருந்து பல சாதனைகள் செய்தவர். எவ்வளவோ சவால்களை சந்தித்தவர். ஜெயலலிதா எனது அரசியல் ரோல் மாடல் என்று ஏற்கெனவே நான் தெரிவித்து இருக்கிறேன். விஜயகாந்த் எம்ஜிஆரை தனது மானசீக குருவாக கொண்டவர்.
மேலும் படிக்க : ”ஜெயலலிதாவுடன் பிரேமலதா” : பரபரப்பை கிளப்பிய எல்.கே. சுதீஷ்
விஜயகாந்த் படம், பிரேமலதா விளக்கம் :
தேமுதிக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆரின் சிலையும் புகைப்படமும் உள்ளது. அரசியலில் எங்களுக்கு மானசீக குரு விஜயகாந்த் தான் என்று சொல்பவர்கள் அவர் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு தேமுதிக அனுமதி வழங்கும். சுவரொட்டிகளிலும் சமூக வலைதளங்களில் மட்டுமே விஜயகாந்த் படத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று நாங்கள் கூறுகிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.
===