

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்
DMK Oppose SIR in Tamil Nadu : தமிழகத்தில் வாக்காளர் பட்டியில் சிறப்பு திருத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதன் பின்னணி என்ன? சிறப்பு திருத்தம் மேற்கொள்வதால் திமுக கூட்டணிக்கு என்ன பாதிப்பு? மத்திய பாஜக அரசு மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? இந்தப் பணிகளை மேற்கொள்வது யார்? கள நிலவரம் என்ன? என்பதை பார்க்கலாம்.
நவம்பர் 7 முதல் பணிகள்
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை(Special Intensive Revision Of Electoral Rolls in Tamil Nadu) மேற்கொள்ளப்பட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4ம் தேதி(TN SIR Start Date) முதல் கணக்கெடுப்பு பணி நடைபெறும். பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தலைமை தேர்தல் ஆணைய ஆணையர் ஞானேஷ் குமார் கூறினார்.
தேர்தலுக்காக எதிர்க்கும் கட்சிகள்
பிகாரில் இந்தப் பணி நடைபெற்ற போது லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் முன்வைத்தன. ஆனால், வாக்காளர்கள் தரப்பில் இருந்து ஒரு புகார் கூட வரவில்லை என்ற உண்மையை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடைத்து விட்டார். அப்படி என்றால், தேர்தலுக்கான பொய் கட்டமைப்பு தான் இது என்பது தெரிந்து விட்டது.
திமுக இரட்டை வேடம்
சரி இப்போது தமிழ்நாட்டிற்கு வருவோம். இப்போது எதிர்ப்பு குரல் கொடுக்கும் திமுக 2017 ஆர்.கே. நகர் தேர்தலில், போலி வாக்காளர்கள்(Fake Voter in Tamil Nadu) இருப்பதாகவும், வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் நடத்த வேண்டும் என்று கோரியது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் திருத்தம் செய்ய உத்தரவிட்டது, ஆனால், திருத்தப்பட்ட பட்டியலில் திமுகவின் குற்றச்சாட்டு தோல்வியடைந்தது. அப்போது திருத்தம் தேவை என்று ஒற்றைக்காலில் நின்ற திமுக இப்போது எதிர்ப்பதன் மூலம் இரட்டை வேடம் அம்பலப்பட்டு நிற்கிறது.
SIR வழக்கமான நடைமுறை தான்
SIR என்றால் என்ன? இது நமக்கு புதிதா என்பதை பார்க்கலாம். தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது வழக்கமான ஒரு நடைமுறை தான். அரசியலமைப்பு ரீதியாக ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்முறை பணியாகும். உண்மையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற 10 திருத்தங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன.
காங்கிரஸ் ஆட்சியில் எதிர்க்காத திமுக
ஜவஹர்லால் நேருவின் காலத்தில் தொடங்கி. வாஜ்பாய் தலைமையிலான NDA அரசின் கீழ் SIR நடத்தப்பட்ட போது, திமுக, அதிமுக தமிழ்நாட்டில் யார் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்களோ அவர்கள் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. எதிர்ப்பையும் காட்டவில்லை. 2004ல், மன்மோகன் சிங்கின் UPA அரசும் SIR ஐ நடத்திது. அப்போது ஆட்சியில் பங்கு வகித்த திமுக எந்தவித எதிர்ப்போ, சதி இருப்பதாகவோ ஒருவார்த்தை கூட பேசவில்லை.
மாநில அதிகாரிகள் பொறுப்பு
ஏனென்றால் SIR திருத்தத்தை மேற்கொள்வது, செயல்படுத்துவது மாநில அதிகாரிகள் தான். மத்திய பாஜக அரசு கிடையாது. :தேர்தல் ஆணையம் திருத்தம் தொடர்பாக வெளியிடும் அறிவிப்பை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் அதிகாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் போன்ற தமிழக அரசு அதிகாரிகள், மாநில நிர்வாகத்தின் ஒரு பகுதியினர் தான் மேற்கொள்கிறார்கள்.
மேலும் படிக்க : ’SIR’ஐ எதிர்க்கும் முதல்வர் : தோல்வி பயம் என நயினார் விமர்சனம்
மக்களை திசை திருப்ப நாடகம்
உண்மை இப்படி இருக்க மாநில அதிகாரிகள் வாக்காளர்களுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக திமுக தலைவர்கள் கூறுகிறார்களா? தங்கள் அதிகாரத்தின் நேர்மையை கேள்விக்குறியாக்குகிறார்களா என சந்தேகம் வருகிறது. உண்மை என்னவென்றால் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப நடத்தப்படும் போலி நாடகம் தான் இது.
திமுகவுக்கு உண்மை தெரியும்
திருப்பூர் மற்றும் ஓசூர் போன்ற இடங்களில் போலி ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதைத் அடிக்கடி பார்க்கிறோம். இதுபோன்ற போலிகளை நீக்கவே சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது(Fake Voters List in Tamil Nadu). இந்த உண்மை திமுகவுக்கு நன்றாக தெரியும்.
தோல்விகளை மறைக்க நாடகம்
திமுக அரசின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது. இந்த சமயத்தில் நிர்வாக தோல்விகளை மறைக்க, மக்களை முட்டாள்களாக்குவது என்ற முயற்சியை கையில் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழக்கமான பணியை குறிவைப்பது, தனது தோல்விகளை திசை திருப்பத்தான்.
நிர்வாகத்தில் திமுக படுதோல்வி
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கு, விவசாயிகளின் துயரங்கள், நெல் கொள்முதலில் அலட்சியம், மோசமான சாலைகள், கேள்விக்குறியாகி விட்ட சட்டம் ஒழுங்கு, நிர்வாக சீர்கேடு போன்றவற்றை சரிப்படுத்த வேண்டிய திமுக வாக்காளர் பட்டியல் குறித்து தேவையற்ற பீதியை மக்களிடம் உருவாக்கி வருகிறது.
தேர்தல் ஆணையத்தின் தொடர்ச்சியான விளக்கங்களுக்கு பிறகும், திமுக உண்மைகளைத் திரிக்கிறது என்றால், அது 2026 தேர்தல் தோல்வி அச்சத்தின் தெளிவான அறிகுறி.
நாடகத்தை மக்கள் பார்க்கிறார்கள்
தமிழக மக்கள் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நடத்தி வரும் அரசியல் நாடகத்தைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழக மக்கள் யதார்த்தம் புரிந்தவர்கள், தகவல் தெரிந்தவர்கள், விழிப்புணர்வு அதிகம் கொண்டவர்கள். திமுகவின் இரட்டை வேடத்தை அவர்கள் மறக்க மாட்டார்கள். உங்களிடம் அவர்கள் ஏமாற மாட்டார்கள். தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
==========