
ரிலையன்ஸ் தலைவர் அனில் அம்பானி :
ED Summoned Anil Ambani on Loan Fraud Case : நம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது சகோதரர் அனில் அம்பானி, 66. இவர், 'ராகாஸ்' எனப்படும் ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் கீழ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு வங்கி மோசடி தொடர்பாக டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அனில் அம்பானியின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சட்டவிரோதமாக பிற நிறுவனங்களில் முதலீடு :
2017 - 19 வரையிலான காலக்கட்டத்தில், அனில் அம்பானிக்கு சொந்தமான ராகாஸ் நிறுவனங்களுக்கு, எஸ் வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன் சட்டவிரோதமாக பிற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில், அனில் அம்பானியை மோசடியாளர் என SBI வங்கி அறிவித்த நிலையில், அவருக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
17,000 கோடி கடன் மோசடி வழக்கு :
இந்தநிலையில், ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கில் விசாரணைக்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ரிலையன்ஸ் இன்ஃப்ரா மற்றும் ரிலையன்ஸ் பவர் பங்குகள் சரிவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. அமலாக்கத்துறை சம்மன் அனில் அம்பானிக்கு புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
மேலும் படிக்க : "Backfire" ஆகும் 25% வரி : ட்ரம்ப் மீது அமெரிக்கர்கள் காட்டம்
ஆகஸ்டு 5ம் தேதி ஆஜராக உத்தரவு :
ஆகஸ்ட் 5 ஆம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறையின் தலைமையகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், மும்பையில் உள்ள ரிலையன்ஸ் குழுமத்துடன்(ED Raid in Reliance Group) தொடர்புடைய 35 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது, இதில் 50 நிறுவனங்கள் மற்றும் 25 பேர் விசாரிக்கப்பட்டனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
====