பசுமை வீடுகள், இலவச பட்டுசேலை : எடப்பாடி தேர்தல் வாக்குறுதி

Edappadi Palaniswami Tour : தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலையும் வழங்கப்படும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
AIADMK General Secretary Edappadi Palaniswami Election Promises
AIADMK General Secretary Edappadi Palaniswami Election Promiseshttps://x.com/EPSTamilNadu
1 min read

Edappadi Palaniswami Tour : தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி கே. பழனிசாமி, கும்பகோணத்தில், மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் :

பின்னர் அவர்களிடையே உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி(EPS Speech), ”திமுக ஆட்சியில் விவசாயிகளுக்காக எந்த திட்டமும் இல்லை. மக்கள் சேவையில் முதன்மையான கட்சி என்றால் அது அதிமுக மட்டும்தான். ஆட்சிக்கு வந்த பின் நெசவாளர்களுக்கு தரமான பசுமை வீடுகள்(Green House) கட்டிக் கொடுக்கப்படும்.

மணமக்களுக்கு இலவசமாக பட்டுச்சேலை :

கைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்து விட்டது. அதிமுக ஆட்சியில் விசைத்தறியாளர்களின் நலன் காக்கப்பட்டது. அவர்களுக்கு முடிந்த அளவு நன்மை செய்யும் விதமாக, அதிமுக ஆட்சி அமைந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டத்துடன்(Thalikku Thangam Scheme 2025) மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்.

மேலும் படிக்க : ‘EPS : நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை கிடப்பில் போட்ட திமுக அரசு

நெசவாளர்களை பாதுகாப்போம் :

பாரம்பரியமாக நெசவுத்தறியில் ஈடுபடுவோரை வாழ வைக்கும் வகையில் அதிமுக ஆட்சி அமையும் போது அரசு நடவடிக்கை எடுக்கும். உற்பத்தி செய்யப்படும் துணிக்கு அன்றைய தினமே பணம் கொடுக்கும் நிலையும் உருவாக்கப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy Election Promises) உறுதியளித்தார்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in