முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு: 25 இடங்களில் அதிரடி சோதனை!

2,538 நகராட்சி பணியிடங்கள் நியமன முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 8 பேர் மீது DVAC வழக்குப்பதிவு.
Ex-Minister KN Nehru DVAC Case Recruitment Scam
Ex-Minister KN Nehru DVAC Case Recruitment Scamsource:google
1 min read

Ex-Minister KN Nehru DVAC Case Recruitment Scam

வழக்குப்பதிவு பின்னணி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு ஊழியர்களை நியமித்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 8 பேர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறை இயக்ககம் அளித்த புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமையகத்தில் குற்ற எண் 02/2026-ன் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

குற்றச்சாட்டுகளின் விவரம்

குடிநீர் வழங்கல் துறையின் பல்வேறு பிரிவுகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் முதலானவற்றில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர் உள்ளிட்ட மொத்தம் 2,538 பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்து நியமனம் செய்ததில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹவாலா பணப் பரிவர்த்தனை

தகுதியற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெருமளவில் பணம் வசூலிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகவும், இந்தப் பணப் பரிவர்த்தனைகள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஹவாலா வழியாக மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.

25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாமக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் கே.என். நேரு தொடர்புடைய மொத்தம் 25 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள்

இந்த சோதனையின்போது, வழக்கு விசாரணைக்குத் தொடர்புடைய 170 ஆவணங்கள் மற்றும் 13 மின்னணு ஆவணங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களின் அடிப்படையில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி : சென்னை நந்தனத்தில் முதலமைச்சர் விஜய் மரியாதை...!

============