பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி : சென்னை நந்தனத்தில் முதலமைச்சர் விஜய் மரியாதை...!

சென்னை நந்தனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் மாலை அணிவித்து மரியாதை.
Pasumpon Muthuramalinga Thevar Jayanthi CM Vijay Homage
Pasumpon Muthuramalinga Thevar Jayanthi CM Vijay Homagesource: google
1 min read

Pasumpon Muthuramalinga Thevar Jayanthi: Chief Minister Vijay pays tribute in Nandanam, Chennai!

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை இன்று அனுசரிக்கப்படுகிறது. இவ்விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு முதலமைச்சர் விஜய் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

இந்த நிகழ்வின் போது, முதலமைச்சருடன் அமைச்சர்கள் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வெங்கடரமணன் உள்ளிட்ட அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் உடனிருந்து இவ்விழாவில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்த்து

முத்துராமலிங்கத் தேவரின் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் முதலமைச்சர் விஜய், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபடி சிறிது தூரம் நடந்து சென்று அங்கிருந்தவர்களின் ஆரவாரமான வரவேற்பையும், வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டார்.

இதையும் படிங்க: டாஸ்மாக் மது பாட்டில்களுடன் ரூ.10 கூடுதல் கட்டணம்: நிர்ணய விலையிலேயே சேர்த்து விற்பனை செய்ய உத்தரவு!

===============