

விவசாய திட்டங்கள்
PM Narendra Modi Agriculture Schemes for Farmers : சாதனைகளை படைப்பதில் எப்போதும் சளைக்காத மத்திய பாஜக அரசு, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விவசாய முகத்தை மாற்றி அமைத்து இருக்கிறது. நலத்திட்ட உதவிகள், சிறப்பு செயலாக்க பணிகள் மூலம் விவசாயிகள் தன்னிறைவு பெற்று வருகிறார்கள்.
10 ஆண்டுகளால் மோடி அரசு தமிழ்நாட்டு விவசாயிகள் நலன் காக்க கையில் எடுத்த திட்டங்கள், விவசாயிகளின் கைகளில் நேரடியாக பணம் வரவு வைப்பது, நீர்ப்பாசனத்தை விரிவுபடுத்துதல், பயிர்களைப் பாதுகாத்தல், மண் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பெண் விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் மீன்வள உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும்.
தமிழக விவசாயிகள் பயன்
இதன் மூலம் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் விளைவுகளை மையமாகக் கொண்ட திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) விவசாயிகளுக்கு ஆண்டுதோறும்(21st Installment of PM Kisan Samman Nidhi 2025) மூன்று தவணைகளில் தலா 6,000 ரூபாயை வழங்குகிறது.
44.56 லட்சம் பயனாளிகள்
2020–21 நிதியாண்டில் தமிழ்நாட்டில் 44.56 லட்சம் பயனாளிகள் பயனடைந்து இருக்கிறார்கள். இந்த ஆண்டு பிப்ரவரி வரையிலான நிலவரப்படி தமிழ்நாட்டிற்கு ரூ.11,855.90 கோடி ஒதுக்கப்பட்டது.
19வது தவணையின் கீழ், தமிழ்நாட்டில் 5,07,731 பெண்கள் பயனளிக்கும் வகையில் ரூ.112.01 கோடி வழங்கப்பட்டது. 2018 முதல் 2023க்குள் ரூ.70,664.27 கோடி மதிப்புள்ள பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டன.
60 வயது விவசாயிகளுக்கு ஓய்வூதியம்
செப்டம்பர் 2025 வரை பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் மொத்த காப்பீட்டுத் தொகைகளில் ஆண்டு வாரியாக அதிகரித்து வருகிறது. பிரதான் மந்திரி கிசான் மான்தன் மூலம் 60 வயதை எட்டிய விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ₹3,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் 1,10,640 பயனாளிகள் செப்டம்பர் வரை பயன்பெற்று இருக்கிறார்கள்.
மண் சுகாதார திட்டம்
அடுத்ததாக மண் சுகாதார அட்டை திட்டம் 12 அறிவியல் அளவுருக்களை விவசாயிகளுக்கு வழங்குகிறது. இது விளைச்சலை மேம்படுத்தவும் உள்ளீட்டு செலவுகளைக் குறைக்கவும் உதவுகிறது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் வரை 70 லட்சம் மண் சுகாதார அட்டைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
கிசான் கிரெடிட் கார்டு
கிசான் கிரெடிட் கார்டு (KCC) என்பது சாகுபடிக்கு சரியான நேரத்தில் மற்றும் போதுமான கடன் ஆதரவை வழங்கி வருகிறது. தமிழகத்தில் 4,084,403 KCC கணக்குகள் செயல்பாட்டில் இருக்கின்றன. மொத்தமாக நிலுவையில் உள்ள கடன், ரூ.54,130.68 கோடியாகும். இது மட்டுமின்று மேலும் பல திட்டங்களும் விவசாயிகளுக்கு பேருதவியாக இருந்து வருகின்றன.
டிஜிட்டல் சந்தை
e-NAM என்பது நாடு தழுவிய டிஜிட்டல் சந்தை மண்டிகளை ஒன்றிணைக்கிறது. இதனால், தமிழக விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மை என்று பார்த்தால், உள்ளூர் சந்தைகளுக்கு அப்பால் விளை பொருட்களை விற்பதன் மூலம் சிறந்த விலைகளை பெறுகிறார்கள்.
சேமிப்பு, குளிர்பதன சங்கிலிகள் மற்றும் அறுவடைக்கு பிந்தைய உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்காக ₹1 லட்சம் கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், வாழை, வெங்காயம், மஞ்சள் ஆகியவை வீணாவது குறைக்கப்பட்டு, விவசாயிகள் வருமானம் அதிகரிக்கிறது.
பரம்பரகட் கிருஷி விகாஸ் யோஜனா (PKVY) என்பது கரிம வேளாண்மை முயற்சியாகும். அப்படி என்றால்,கால நிலைக்கு ஏற்ப நிலையான வேளாண்மை செய்வது. காலமாற்றத்தை எதிர்த்தும் விவசாயம் செய்வது, நீர் மேலாண்மை, பாதுகாக்கப்பட்ட சாகுபடிக்கு இது பயன்படுகிறது.
அடுத்ததாக நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மூலம் வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, மல்லிகை பயிர்களுக்கு மதிப்பு கூட்டலை செயல்படுத்துவதாகும். தேசிய தேனி வளர்ப்பு மற்றும் தேன் பதப்படுத்துதல் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டு, கூடுதல் வருமானம் ஈட்ட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு நலத்திட்டங்கள்
மீனவர்களுக்கான மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) திட்டம் மீன்வளத்தை நவீனமயமாக்குகிறது. உள்கட்டமைப்பு, சிறந்த சேமிப்பு, சிறப்பான ஏற்றுமதி மூலம் கடலோர மீனவர்களின் வருமானத்தை அதிகரிக்க செய்கிறது. ராஷ்ட்ரிய கிரிஷி விகாஸ் யோஜனா (RKVY) திட்டம், விவசாய உள்கட்டமைப்புகளில் புதுமைகளை கொண்டு வந்திருக்கிறது.
தேசிய கால்நடை மிஷன் (NLM) ஆடு மற்றும் கோழி வளர்ப்பாளர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கிறது. பால் பண்ணைகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்த நிதி வழங்கப்பட்டு, நவீன பால் பண்ணைகள், பதப்படுத்தும் தளங்கள், குளிர்விக்கும் அலகுகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. பண்ணைகள் மூலம் அதிக பால் கொள்முதல் செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கிறது.
தோட்டக்கலை (MIDH) ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டம் மூலம் பாலிஹவுஸ்கள், நர்சரிகளுக்கு உரிய ஆதரவு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர் துறைகளில் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது. மூங்கில் தோட்டங்கள் மற்றும் மூங்கில் சார்ந்த தொழில்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
மலைப்பகுதி விவசாயிகளுக்கு நீண்ட கால, உயர் மதிப்பு வருமானம் கிடைக்க வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.
டிஜிட்டல் வேளாண்மை
மற்றோரு புரட்சியாக டிஜிட்டல் வேளாண்மை மூலம் பயிர் ஆய்வுகள் துல்லியமாக மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்மார்ட் வேளாண் தொழில்நுட்பம். உள்ளீட்டு செலவுகளைக் குறைத்து, விவசாயத்தில் துல்லியத்தன்மை அதிகரிக்க செய்கிறது.
மேற்கூறிய திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருதால், விவசாயத் துறை வலுவான நிதி உதவியை பெற்று வருகிறது.
அதிக வருமானம் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாய குடும்பங்களின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து வருகிறது.
===================