OPS Manadu: மதுரையில் மாநில மாநாடு : தனி வழியில் பயணிக்கும் ஓபிஎஸ்

OPS Maanadu in Madurai : அதிமுகவில் இணைய வாய்ப்பு இல்லை என்ற நிலையில், மதுரையில் மாநில மாநாடு நடத்தி, எதிர்கால திட்டங்களை அறிவிக்க இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
O Panneerselvam Speech About OPS Madurai Maanadu
O Panneerselvam Speech About OPS Madurai Maanadu
1 min read

எடப்பாடி புறக்கணிப்பு, ஓபிஎஸ் எதிர்காலம்? :

OPS Maanadu in Madurai : அதிமுகவில் எடப்பாடியை பகைத்ததால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆதரவுடன் மீண்டும் கட்சிக்குள் இணைய முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு பாஜகவின் துணையையும் அவர் நாடினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருந்ததால், மூன்று பேரும் மீண்டும் அதிமுகவிற்குள் இணைந்து விடுவார்கள் என்ற கணக்கு பொய்யாகி போனது.

மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் அவரது மகனுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்தும், இருவரும் தோற்றுப் போனார்கள். இதனால், பெரும் அரசியல் பின்னடைவை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் ஓபிஎஸ்(OPS). அண்ணாமலை இருந்தவரை பாஜக மூலம் எப்படியாவது அதிமுகவில் இணைந்து விடலாம் என்ற அவரது எண்ணமும் ஈடேறவில்லை.

மேலும் படிக்க : கொடுங்கோல் காட்சிகளே ”திராவிட மாடல் ஆட்சி” : ஓபிஎஸ் காட்டம்

ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை :

தமிழக பாஜக தலைவரும் மாற்றப்பட, எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றது. ஓபிஎஸ்(OPS) கண்டு கொள்ளாமல் விடப்பட்டார். இதனால் அவரது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்தது. இந்தநிலையில் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார்.

ஓபிஎஸ் சார்பில் மதுரையில் மாநாடு :

இந்தக் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ் அணியின் ஆலோசகர் பண்டுருட்டி ராமச்சத்திரன்(Panruti Ramachandran), : "நாம் யார் பின்னாலும் செல்லப் போவதில்லை. நாம் யாரையும் எதிர்பார்த்து அரசியல் நடத்தவில்லை." என்றார்.

ஓபிஎஸ் மதுரை மாநாடு தேதி :

"செப்டம்பர் 4ல் மதுரையில் மாநாடு(OPS Madurai Maanadu Date) நடைபெறுகிறது. 2026 தேர்தலில் தெளிவான முடிவை எடுக்கும் வகையில் செப்டம்பரில் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டுக்கு முன்னோட்டமாக மாவட்டம் தோறும் கழக செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். ஏற்கனவே எல்லா பொறுப்புகளிலும் ஓபிஎஸ்ஸும் இருந்திருக்கிறார். நானும் இருந்திருக்கிறேன். நாங்கள் எல்லாம் எல்லா பதவிகளையும் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம்” என்று கூறினார்.

சட்டப் போராட்டம் தொடரும், மீட்டெடுப்போம் :

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்(OPS Press Meet), "அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்டப் போராட்டத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. அதிமுக மீட்டெடுப்பிற்கான சட்டப் போராட்டம் தொடரும். எதிர்காலத்தில் நமது நோக்கத்தை வென்றெடுப்போம்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை ஆட்சியில் அமர்த்தவே தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராக ஆக முடியும். மதுரையில் மாநில மாநாடு(OPS Madurai Maanadu) எனது தலைமையில் நடக்க உள்ளது. நமது எதிர்கால திட்டங்கள் என்ன என்பதை மதுரை மாநாட்டில் அறிவிப்பேன்" எனக் கூறியுள்ளார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in