Gold Price Today: தங்கம் சவரன் ரூ.75,760 : வரலாற்றில் புதிய உச்சம்

Gold Price Today in Tamil Nadu : தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவு ஒரு சவரன் ரூ.75,760 என்ற புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது.
Gold Rate Today Increased New Hike in Tamil Nadu
Gold Rate Today Increased New Hike in Tamil Nadu
1 min read

தாறுமாறாகும் தங்கம் விலை :

Gold Price Today in Tamil Nadu : உலக அளவில் நிலவும் பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது இயல்பு. இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரி விதிப்புகள், சந்தைகளிலும், தங்க முதலீட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 9,380 ரூபாய்க்கும்(Yesterday Gold Rate in Chennai), சவரன், 75,040 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. நேற்று ஒரு கிராம் 9,400 ரூபாய்க்கும், சவரன் 75,200 ரூபாய்க்கும் விற்பனையானது.

ஒரு சவரன் தங்கம் ரூ.75.760 :

இந்தநிலையில், இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,760க்கு விற்பனை ஆகிறது(Today Gold Rate). கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470க்கு விற்பனை செய்யப்படுகிறது.

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் :

தங்கம் விலை முதல்முறையாக, புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.75,760 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் தொடரும் என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சத்தை எட்ட வாய்ப்பு(Gold Rate Reach 1 Lakh) இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வார காலத்தில் தங்கத்தின் விலை :

08-08-2025 - சவரன் - ரூ.75,760

07-08-2025 - சவரன் - ரூ.75,200

06-08-2025 - சவரன் - ரூ.75,040

05-08-2025 - சவரன் - ரூ.74,960

04-08-2025 - சவரன் - ரூ.75,360

03-08-2025 - சவரன் - ரூ.74,320

மேலும் படிக்க : Gold Rate Today: புதிய உச்சத்தில் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.75,200

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in