
படிப்படியாக அதிகரிக்கும் தங்கம் விலை :
Gold Rate Today in Chennai : சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜனவரி மாதம் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு :
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கும் நடைமுறை குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின்(Donald Trump) அறிவிப்புக்கு பின்னர் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை ரூ.1,120 ஆக அதிகரிப்பு :
தமிழகத்தில் நேற்று முன்தினம், ஆபரண தங்கம், சவரன் 73,360 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று ரூ. 73,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இந்தநிலையில், இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை(Today Gold Rate) சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,320க்கு விற்பனை ஆகிறது.கிராமுக்கு ரூ.140 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,290க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தங்கத்தின் விலையும்(24 Carat Gold Rate Today) கிராமுக்கு ரூ.153 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,135-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.125 என விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,680-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லை :
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. கிராமுக்கு ரூ.123 என்ற கணக்கில் ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,23,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க : 75,000ஐ தாண்டியது தங்கம் விலை : வரலாறு காணாத உச்சம்
ஆவணி மாதம் வர இருப்பதால், முகூர்த்த நாட்கள் வரிசையாக வரும். எனவே, தங்கத்தின் விலை மேலும் உயரவே வாய்ப்பு அதிகமாக இருப்பதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
============