Gold Rate Today : மீண்டும் 74 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை...

Gold Rate Today in Chennai : தங்கத்தின் விலை மீண்டும் சவரன் 74 ஆயிரம் ரூபாயை தாண்டியதால், சாமான்ய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Gold Rate Today in Chennai
Gold Rate Today in Chennai
1 min read

தங்கம் விலை கிடுகிடு உயர்வு :

Gold Rate Today in Chennai : சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணங்களாக உள்ளன. பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்து வரும் கூடுதல் வரி விதிப்புகளும், தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது. இவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

உச்சத்தில் ஆபரணத் தங்கம் :

அந்த வகையில், கடந்த மாதம் 14ம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து(1 Gram Gold Rate) ஒரு கிராம் ரூ.9,320க்கும், ஒரு சவரன் ரூ.74,560க்கும் விற்பனையானது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்த விலை, சில நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கியது.

மீண்டும் 74,000ஐ கடந்த தங்கம் :

இந்த நிலையில், வாரத்தின் 2ம் நாளான இன்று, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை(22 Carat Gold Rate) கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,285க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.74,280க்கும் விற்பனை(1 Sovereign Gold Rate) செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ரூ.2 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.128க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,28,000க்கும் விற்பனை(Silver Rate Today) செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தற்போதைய குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர். ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரிப்பு, சாமான்ய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மேலும் படிக்க : ”யுபிஐ” பணப்பரிவர்த்தனை இந்தியா "டாப்" : சர்வதேச நிதியம் பாராட்டு

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in